Latest News

February 24, 2014

லண்டனில் இருந்து ஊருக்கு பணம் அனுப்புவது ஜாக்கிரதை: உண்மை சம்பவம் !
by admin - 0

பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில் பாரிய தொல்லைகளும் ஏற்படுகிறது. இதனை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரை அதிரவைத்துள்ளது. ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள தமிழர் ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு குறிப்பிட்ட பணமாற்று நிறுவனம் ஒன்றினூடாக பணத்தை அனுப்பியுள்ளார். அந்த தமிழர் நிறுவனம் , காசு அனுப்ப வந்தவரின் பாஸ்போட் மற்றும் சாரதிப் பத்திரத்தை போட்டோ காப்பி எடுத்து வைத்துவிட்டு , பின்னர் பணத்தை வாங்கி அதனை ஊருக்கும் காசை அனுப்பிவிட்டார்கள்.

ஊரில் உள்ள நபர்களும் காசைப் பெற்றுவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து காசு அனுப்பிய நபரிடம் விசாரணை என்றுவந்த பொலிசார், 1 வருடத்தினுள் 30,000 பவுன்சுகளை நீங்கள் ஏன் பணமாற்று சேவை ஊடாக இலங்கைக்கும் , இந்தியாவுக்கும் அனுப்பினீர்கள் என்று கேட்டுள்ளார்கள். திகைத்துப்போன அன் நபர், தான் வெறும் 500 பவுண்டுகளை மட்டுமே சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பியதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரை கைதுசெய்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட நபர், 18,000 பவுன்சுகளையே வருடம் ஒன்றுக்கு உழைப்பதாக அறிந்த பொலிசார் அவரிடம் 30,000 ஆயிரம் பவுண்ஸ் பிளக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் பின்னர் பணம் அனுப்ப இவர் அணுகிய பணமாற்று சேவையை அணுகி விசாரணைகளை நடத்திவருகிறார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் இந்த பணமாற்று சேவை, குறித்த நபர் ஒருவரின் பேரில் லண்டனில் இருந்து பணத்தை வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசா இல்லாத மற்றும் அடையாள அட்டை இல்லாத நபர்களின் பணப் பரிமாற்றத்தை அவர், இன் நபரின் பேரில் மேற்கொண்டு வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் இவ்விடையத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 


நன்றி அதிர்வு .
« PREV
NEXT »

No comments