விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கக் கூடும் என இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அந்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியேறிய விடுதலைப் புலிகளுக்கு அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள் புகலிடமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்த தீவுகளின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கையர்கள் தீவுகளுக்குள் புகுந்துள்ளதாக அந்தமான் அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து கடந்த காலத்தில் குடியேறியவர்கள் இருக்கின்றனர். முன்னர் குடியேறியர்களை பயன்படுத்தி, குடியேறும் சாத்தியங்கள் இருக்கலாம் என் தீர்வுகளின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி இந்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலையியல் குழுவின் முன் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேறிய புலிகளின் உறுப்பினர் அந்தமான் தீவுகளை அருகில் இருக்கும் பாதுகாப்பான புகலிடமாக கருதியிருக்கலாம். அவர்கள் மக்கள் வசிக்காத தீவுகளை தமது தற்காலிகமான மறைவிடங்களாக பயன்படுத்திக் கொள்ள கூடும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவில் இருந்து ஆயிரத்து 200 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுமாவில் அமைந்துள்ளது. 8 ஆயிரத்து 249 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கான தீவுகள் காணப்படுகின்றன.
577 தீவுகளில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. தீவுகளில் உள்ள தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்களை போல் இலங்கை தமிழர்கள் மீது இரக்கம் கொண்டுள்ளதாக அந்தமான் நிக்கோபர் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் அழைத்துச் செல்லப்பட்டு குடியேற்றப்பட்ட இலங்கை அகதிகளிடம் விடுதலைப் புலிகள் இலகுவாக அனுதாபத்தையும் உதவிகளையும் பெற்று தீவுகளில் உள்ள அடர்ந்த காடுகளில் தற்காலிகமாக குடியேறியிருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
No comments
Post a Comment