ஜனநாயக நாடொன்றின் ஊடக சுதந்திரம் உயிர் மூச்சாக ஊடகங்களே விளங்குகின்றன. ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரும் போதுதான் ஜனநாயகம் பிசகின்றி நிலைநிறுத்தப்பட முடியும்.
இதைவிடுத்து அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊது குழல்களாக ஊடகங்கள் மாறும் போது ஜனநாயகம் அழிக்கப்படுவதோடு மக்களும் ஏமாற்றப்படுகின்றனர். நேர்மையாகவும், உண்மைத் தன்மையுடனும் நடந்து கொள்ளும் எந்த அரசும் தமது நாட்டில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடவேண்டிய அவசியமே இருக்காது.
இதே வேளை பக்கச்சார்பின்றிச் செய்திகளை வெளியிட வேண்டிய முக்கிய பொறுப்புக்களும் ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் காரணமாகப் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆட்சியாளர்கள் பலர் தமது பதவிகளை இழந்துள்ளனர். இதனால் ஊடகங்களுக்கு அஞ்சும் நிலையும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே உலகின் பல நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஊடகங்களை வைத்திருப்பதற்கு விரும்பிச் செயற்பட்டு வருகின்றார்கள்.
தமக்குச் சார்பான செய்திகளை வெளியிடாத ஊடகங்களை முடக்கி வைக்கும் நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சில வேளைகளில் கொல்லப்பட்டும் விடுகின்றனர். சிலர் விலை பேசப்படுகின்றனர். இதற்கு இணங்கியவர்கள் பணிந்து நிற்கின்றனர். இன்றைய நவீன உலகிலே ஊடகங்களின் பங்கு அளப்பரியது. உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சம்பவமொன்று ஒரு சில விநாடிகளில் உலகெங்கும் செய்தியாகப் பரவிவிடும் அதிசயம் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதற்கான தொழில்நுட்ப வசதிகள் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. ஆனால் இன்றும் கூட ஊடக சுதந்திரம் முடக்கப்பட்ட நிலை பல நாடுகளில் காணப்படுகின்றமைதான் வேதனை தருகின்றது.
ஊடகங்களைப் பொறுத்த வரையில் பத்திரிகைகளே இன்றும் கூட முதன்மை நிலையில் உள்ளன. வாசிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பத்திரிகைகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ள போதிலும் உலகின் பெரும்பாலான மக்கள் பத்திரிகைகளையே நாடுகின்றனர்.
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்திகளைப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்வதைவிட பத்திரிகையில் வாசித்து அறிந்து கொள்வதில் மக்களிடையே உள்ள ஆர்வம் குறைந்துவிடவில்லை என்றே கூற வேண்டும்.
பத்திரிகையில் தம்மைப் பற்றிய செய்தியயான்று வெளிவரும்போது மகிழ்ச்சி அடையாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதைப்போன்று தம்மைப்பற்றி தவறான செய்திகள் வெளிவரும் போது கூனிக்குறுகி நிற்பவர்களும் உண்டு.
ஆனால் அரசியல் என்னும் சகதிக்குள் பெரும்பாலான ஊடகங்கள் சிக்கிச் சீரழிவதைப் பார்க்கும் போது தான் இரத்தக் கண்ணீர் வடிக்கத் தோன்றுகின்றது. அரசியலில் நிகழும் சீர்கேடுகளைக்களைய வேண்டிய பொறுப்பிலிருந்து இவை நடந்து கொள்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது நாட்டிலே கொடிய போர் ஒன்று இடம்பெற்று ஓய்ந்து விட்டதாகப் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் அதனால் ஏற்பட்ட கொடிய விளைவுகள் நீண்ட தாமதத்தின் பின்னரே தெரியவந்தன. இதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.
இவை இல்லாது விட்டால் எல்லாமே மறைக்கப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. எமது நாட்டைப் பொறுத்த வரையில் ஊடகவியலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமற் போயுள்ளனர்.
ஊடகங்கள் இயங்கி வரும் அலுவலகங்கள், சாதனங்கள் தாக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டதுடன் அங்கு பணிபுரிபவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இத்தகைய செயல்கள் இடம்பெறும் நாடொன்றில் ஊடக சுதந்திரத்தைப் பற்றிக் கதைப்பதில் பயனெதுவும் இல்லை. அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் செய்திகளில் உண்மைத் தன்மை பேணப்பட வேண்டும். இதைத்தான் வாசகர்களும் விரும்புகின்றனர்.
ஆசிய, ஆபிரிக்க மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்கும் நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்குலக நாடுகளில் ஊடகங்களைப் பொறுத்த வரை நிலைமை சற்று உயர்ந்த நிலையில் உள்ளதைக் காணமுடிகின்றது.
சில நாடுகளின் தமது ஆட்சித் தலைகள் கூறுவதை விட ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை நம்பும் மக்கள் அதிகளவில் உள்ளதையும் காணமுடிகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்ரன் தமது அலுவலகத்தில் பணிபுரிந்த மோனிக்கா என்ற பெண்ணுடன் தாம் கொண்டிருந்த உறவை மறுத்த போதிலும் ஊடகங்களில் அது தொடர்பாக ஆதாரத்துடன் செய்திகள் வந்தபோது வாயடைத்துப் போய் பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்டு ஊடகங்கள் நாட்டின் ஜனாதிபதியே தவறு செய்துவிட்டால் இதனை மறைத்தால் என்ன என்று எண்ணவில்லை.
மாறாக பாரபட்சமின்றி மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்தின. அமெரிக்காவில் இன்றளவும் ஜனநாயகம் தழைத்து நிற்பதற்கு ஊடகங்களின் இந்த உண்மைத்தன்மையே பேருதவி புரிகின்றன.
பிரிட்டிஸ் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. பிரதமர் தொடக்கம் அரச குடும்பம் வரை பாரபட்சமில்லாத செய்திகளையே அவை வழங்கி வருகின்றன.
இவற்றையயல்லாம் கேட்கும் போது நாம் எத்தகைய தாழ்ந்த நிலையில் உள்ளோம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்றெல்லாம் கூறுவதை விடுத்து பத்திரிகையைச் சுதந்திரமாக இயக்குவதற்கு வழிவிட்டு ஒதுங்கினாலே அதுவே பெரியகாரியமாக இருக்கும்.
எந்த நாட்டில் ஊடகங்களின் குரல் வளையில் கைவைக்கப்படாத நிலை காணப்படுகின்றதோ அங்குதான் உண்மையான ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் நிலை நிறுத்தப்படுகின்றது. அதைவிடுத்து அவற்றின் குரலை அடக்கி வைத்துக் கொண்டு வேம் போட்டு வார்த்தைகளை உதிர்ப்பதில் அர்த்தமே இல்லை.
ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் அச் மின்றிப் பணிபுரிய வேண்டும். இவையே மக்களின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் விருப்பங்கள் என்று கூறுவதில் தவறொன்றும் இல்லை. ஊடகசுதந்திரம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் காரணமாக பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆட்சியாளர்கள் பலர் தமது பதவிகளை இழந்துள்ளனர். இதனால் ஊடகங்களுக்கு அஞ்சும் நிலையும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே உலகின் பல நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக் கும் ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஊடகங்களை வைத்திருப்பதற்கு விரும்பிச் செயற்பட்டு
வருகின்றார்கள்.

- உதயன்
No comments
Post a Comment