Latest News

February 25, 2014

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை வெளிவந்தது : அனைத்துலக விசாரணைக்குபரிந்துரை
by admin - 0


சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கை சற்று முன்னர் வெளிவந்துள்ளது.

சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில், தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை 
பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவன முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும் , எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறிலங்கா உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத்  தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் , சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது வரும் மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் வலுவான அனைத்துலக விசாரணை நடத்த கோரும் தீர்மானத்துக்கு வழிகோல வேண்டுமென A mnestyநம்பிக்கை தெரிவித்துள்ளது. http://www.amnesty.org/en/for-media/press-releases/sri-lanka-un-report-must-be-call-action-international-war-crimes-investigat
« PREV
NEXT »

No comments