இலங்கையில் இரகசிய முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.
தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. இத்தகைய கொடுமைகளைத் தீர்ப்பதற்கான எந்தவோர் ஏற்பாடும் இலங்கையில் இல்லை. அங்கு நீதித் துறையும்கூட அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது.
வெள்ளை வான்களில் வந்து தமிழ் இளைஞர்களைக் கடத்துவதாகவும், 2009 மே மாதத்திற்குப் பிறகு நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
ஊடகவியலாளர்களும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் இனப்படுகொலை என்ற பிரிவில் அடங்கக்கூடியவை.
2004 - 2008 ஆண்டுகளுக்கிடையே ஊடவியலாளர்கள் 31 பேர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 24 பேர் தமிழர்கள்.
இலங்கை அரசு சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றும் விதமாக தடுப்பு முகாம்களை மூடி வருகிறது. ஆனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை தமது சொந்த ஊருக்குச் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்கள் எந்த வசதியுமற்ற அகதி முகாம்களில்
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களின் நிலங்களையும் கட்டிடங்களையும் சட்டவிரோதமாக அபகரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
சிங்களவர்களை வலிந்து தமிழர் பகுதிகளில் குடியேற்றும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழர்களின் அன்றாட வாழ்க்கை சிங்கள இராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது வீடுகளில் தனிப்பட்ட சடங்குகளைச் செய்வதற்குக்கூட இராணுவத்திடம் அனுமதிபெற வேண்டிய நிலை உள்ளது. முடிதிருத்தும் கடைகளையும் மளிகைக் கடைகளையும்கூட இராணுவமே நடத்துகிறது. விவசாயத்திலும் மீன்பிடித் தொழிலிலும் சிங்கள இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மறுக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் சர்வதேசச் சமூகம் அறிந்திருந்தும், இலங்கை அரசே இதுகுறித்து விசாரித்து நீதி வழங்க வேண்டுமென்று கூறிவருகிறது. இனவெறிபிடித்த இலங்கை அரசை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தவொரு நம்பிக்கையும் கண்ணில் தெரியவில்லை.
ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

No comments
Post a Comment