Latest News

February 27, 2014

நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!
by Unknown - 0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகத்தான் அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்று மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அப்போது எஞ்சிய 4 பேர் விடுதலைக்கும் மத்திய அரசு சார்பில் தடை கோரப்பட்டது. அதற்கு தனியே மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நளினி உட்பட 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை விடுவிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு எதிரான மனுவுடன் சேர்ந்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 7 பேருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 பேரின் விடுதலையை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. கருத்து கேட்டபோதும் மத்திய அரசு உச்சநீதிமன்றம் மனு செய்தது ஏன் என்றும் தமிழக அரசு வாதம் செய்தது.
« PREV
NEXT »

No comments