தமிழினப் படுகொலைக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்தின் ஓர் அங்கமாக, அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தியவாறு, லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி நடை பயணமொன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு, பல நடை பயணங்கள் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்று வரும் நிலையில், இந்த நடை பயணமானது நீதிக்கும் சமாதானத்துக்குமென்ற முழக்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் எதிர்வரும் 3ம் திகதி 10 Downing Street எனும் இடத்தில் இருந்து லண்டனில் இருந்து புறப்படும் இந்த நடை பயணமானது, தலைநகர் பாரிஸ் ஊடாக 21/03/2014 நாளன்று ஜெனீவாவினை சென்றடையவுள்ளது.
இந்த நடை பயணத்தின் ஊடாக வேற்றின மக்கள் மத்தியில் எமக்கான நீதிக்கான நியாயப்பாடுகளை ஆங்கிலம் -பிரென்சு மொழிகளில் விநியோகித்தும், கிடைக்கக் கூடிய வாய்ப்புகளில் அரசியல் அரச பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை கையளித்தவாறும், இந்த நடை பயணத்தினை மேற்கொள்ள இருப்பதாக தமிழீழ விடுதலையின் மூத்த செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரிநிதியுமாகிய திரு.இராசலிங்கம் திருக்குமரன் (குமார்) தெரிவித்துள்ளார்.
எமது விடுதலைக்கான நீண்ட நடைப் பயணத்தில் இம்முறை ஜெனீவாவில் அனைத்துல விசாரணைக்கான தீர்மானம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு எனது நடை பயணத்திற்கான பாதச்சுவடுகளை உங்கள் அனைவரது உணர்வுபூர்வமான ஒத்திசைவோடு எடுத்து வைக்க இருக்கின்றேன் என தெரிவித்துள்ள இராசலிங்கம் திருக்குமரன், இந்த நடை பயணத்திற்கு அனைவரதும் ஒத்துழைப்பினையும் வேண்டியுள்ளார்.
No comments
Post a Comment