Latest News

January 19, 2014

போர்க்­குற்ற விவ­கா­ரத்தில் தனித்து நிற்கும் தமி­ழர்கள்
by admin - 0

போர்க்­குற்ற ஆதா­ரங்­களைத் திரட்டும் நோக்கில் இலங்கை வந்­தி­ருந்த அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களத்தில், போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் .ெஜ .ெரப், யாழ். ஆயர் இல்­லத்தில் வைத்து யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் மற்றும் மன்னார் ஆயர் வண.இரா­யப்பு ஜோசப் ஆகி­யோரை சந்­தித்­தி­ருந்தார்.
இதன்­போது போரின் இறு­திக்­கட்­டத்தில் படை­யி­னரின் விமா­னக்­குண்­டுகள், கிளஸ்டர் குண்­டுகள், இர­சா­யனக் குண்­டு­களால் தான் அதி­க­ளவு பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக ஸ்டீபன் ரெப்­பிடம் ஆயர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.
அவர்­களின் இந்தக் கருத்து பெரும் சர்ச்­சை­களை உரு­வாக்கி விட்­டுள்­ளது.
ஒரு பக்­கத்தில் உட­ன­டி­யா­கவே இலங்கை இரா­ணுவம் இதனை நிரா­க­ரித்­தது.
தாம் ஒரு­போதும் இத்­த­கைய குண்­டு­களை பயன்­ப­டுத்­தி­யதும் இல்லை, அவற்றைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வச­தி­களும் தம்­மிடம் இல்லை என்று கூறி­யி­ருந்தார் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய.
அதே­வேளை, போரில் கிளஸ்டர் குண்­டு­களை வீசி­ய­தாக ஸ்டீபன் ரெப்பிடம் எடுத்துக் கூறிய, - இரா­ணு­வத்தின் மீது போர்க்­குற்றம் சுமத்­திய யாழ், மன்னார் ஆயர்­களும் பயங்­க­ர­வா­தி­களே என்றும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் பிர­தி­ய­மைச்­ச­ரா­க­வுள்ள முன்னாள் கடற்­படை அதி­காரி றியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர கூறி­யி­ருந்தார்.
அது­மட்­டு­மன்றி தமக்கு மட்­டுமே சிங்­களத் தேசி­ய­வாத இரத்தம் ஓடு­வ­தாக அவ்­வப்­போது காட்டிக் கொள்ளும், விமல் வீர­வன்ஸ போன்ற அமைச்­சர்­களும், ஜாதிக ஹெல உறு­மய, பொது­பல சேனா, இரா­வண பலய போன்ற அமைப்­பு­க்களும் ஆயர்­க­ளுக்கு எதி­ராகப் போர்க்­கொடி உயர்த்­தி­யுள்­ளன.
அதே­வேளை, யாழ், மன்னார் ஆயர்கள் கூறிய போர்க்­குற்­றச்­சாட்டை, ஆயர்கள் பேரவை ஏற்றுக் கொள்­ளாது என்று கர்­தினால் மல்கம் ரஞ்சித் கூறி­யுள்ளார்.
அதா­வது தாமும் தேசி­ய­வாத சிந்­த­னை­யி­லேயே இருப்­ப­தாக கர்­தினால் மல்கம் ரஞ்சித் பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு செய்­தியை வெளிப்­ப­டுத்த முயன்­றாலும், யாழ், மன்னார் ஆயர்­களை கைது செய்ய வேண்டும் என்று பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் போர்க்­கொடி உயர்த்­தி­யுள்­ளன.
ஏற்­க­னவே, பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் ஏனைய மதங்­க­ளுக்கு எதி­ராக குறிப்­பாக கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மதங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலையில், அத்­த­கைய முறுகல் அதி­க­ரிப்­பதை தவிர்ப்­ப­தற்­காக கர்­தினால் மல்கம் ரஞ்சித் தமது ஆயர்­களை விட்டுக் கொடுத்­தாரா? அல்­லது தாமும் தீவிர தேசி­ய­வாதி என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ்­வாறு கூறி­னாரா? என்று தெரி­ய­வில்லை.
எவ்­வா­றா­யினும், போர்க்­குற்­றங்கள் என்று வரும் போது, அதை நியா­ய­ பூர்­வ­மா­கவோ மத ரீதி­யா­கவோ அணு­காமல் இன­ரீ­தி­யாக அணுகி நிரா­க­ரிக்கும் போக்கே இங்கு காணப்­ப­டு­கி­றது.
போரின் இறு­திக்­கட்­டத்தில் போர்க்­குற்­றங்கள் நிகழ்ந்­தன என்ற குற்­றச்­சாட்டை, தமி­ழர்­க­ளான மத­கு­ருக்­களால் மட்­டுமே ஏற்க முடி­கி­றது.
வடக்கு, கிழக்கில் உள்ள கத்­தோ­லிக்க ஆயர்கள் அதை ஏற்றுக் கொண்­டாலும் தெற்­கி­லுள்ள ஆயர்­களின் பார்வை வேறு வித­மா­கவே உள்­ளது.
அது நீதி, நியாயம், உண்மை என்­ப­ன­வற்றைத் தேடு­வதைத் தடுக்­கின்­ற­தாக குறு­கிய, இன­ரீ­தி­யான சிந்­தனைப் போக்கை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கி­றது.
யாழ், மன்னார் ஆயர்­களின் போர்க்­குற்­றச்­சாட்­டு­களை ஆயர்கள் பேரவை ஏற்­காது என்ற கர்­தினால் மல்கம் ரஞ்­சித்தின் கருத்து அர­சாங்­கத்­தையும் படை­யி­ன­ரையும் பாது­காக்க வேண்டும் என்ற நோக்­கத்தை மட்டும் அடிப்­ப­டை­யாக கொண்­டுள்­ளது.
அது அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாக இருந்­தாலும் அது அவர் சார்ந்த இனம் மீதுள்ள விசு­வா­ச­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.
அது­போ­லவே, போர்க்­குற்­றங்கள் விட­யத்தில் முஸ்­லிம்கள், முஸ்லிம் நாடுகள் நடு­நிலை வகிக்க வேண்டும் என்ற கருத்தை வெளி­யிட்­டுள்ளார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
நீதி அமைச்­ச­ரான அவர், ஜெனீவா தீர்­மா­னங்­களைத் தோற்­க­டிப்­ப­தற்­கான முயற்­சி­களில் கடந்த காலங்­களில் தீவி­ர­மாகப் பங்­காற்­றி­யவர் என்­பது யாவரும் அறிந்த ஒன்றே.
ஒரு பக்­கத்தில் போரின் போது முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டிய , அதற்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிய ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரான ரவூப் ஹக்கீம், இப்­போது நடு­நிலை வகிக்க வேண்டும் என்று கூறி­யுள்ளார்.
இங்கு நடு­நிலை என்­பது மதில்மேல் பூனையின் நிலை­யுடன் ஒப்­பி­டலாம்.
அதா­வது போர்க்­குற்­றச்­சாட்­டுகள் விவ­கா­ரத்தில் தமிழர் தரப்­பு­டனும் இணை­யாமல் அரச தரப்­பி­ன­ரு­டனும் இணை­யாமல் இருப்­பதே முஸ்­லிம்­க­ளுக்கு நல்­லது என்று கரு­து­கிறார் அவர்.
ஏனென்றால், அண்­மையில் தம்மைச் சந்­தித்த போர்க்­குற்ற விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க தூதுவர் ஸ்டீபன் ரெப் தமது நிகழ்ச்­சி­நி­ர­லுக்குள் தன்னைக் கொண்டு வர முயன்­ற­தா­கவும் ஹக்கீம் கூறி­யுள்ளார்.
அவ்­வா­றாயின், அமெ­ரிக்கா ஏதோ ஒரு திட்­டத்­துடன் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது என்­பதை அவர் புரிந்து கொண்­டுள்ளார்.
ஆனால், அதற்கு ஒத்­து­ழைத்தால், தமது பதவி பறிபோய் விடும் என்று அஞ்­சு­கி­றாரா? அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என அஞ்­சு­கி­றாரா? என்று தெரி­ய­வில்லை.
எவ்­வா­றா­யினும், போர்க்­குற்­றச்­சாட்­டுகள் விட­யத்தில், நடு­நி­லை­யோடு இருப்­பதே நல்­லது என்று அவர் கூறி­யுள்ளார்.
இதன் மூலம் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலாக இருக்க அவர் ஆசைப்­ப­டு­கிறார்.
ஆனால், போர்க்­குற்ற விசா­ரணை ஒன்று வரு­மே­யானால், இப்­போது நடு­நிலை வகிக்க வேண்டும் என்று கூறிய ஹக்­கீமோ, முஸ்லிம் காங்­கி­ரஸோ அல்­லது ஏனைய முஸ்­லிம்­களோ அதனைத் தமக்­கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் தள­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ள­மாட்­டார்கள் என்று எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை.
கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்சு நடத்­திய போது, அதே அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்­கிரஸ் தம்­மையும் தனித்­த­ரப்­பாக பேச்சில் இணைக்க வேண்டும் என்று கோரி­யது நினை­வி­ருக்­கலாம்.
அது­போன்று, போர்க்­குற்ற விசா­ரணை என்று வரும் போது இப்­போ­தைய மௌனத்தை முஸ்­லிம்கள் நிச்­சயம் கடைப்­பி­டிக்கப் போவ­தில்லை.
அவர்கள் அவ்­வாறு ஒதுங்­கி­யி­ருக்க அர­சாங்­கமும் விடப் போவ­தில்லை.
விடு­தலைப் புலி­களின் போர்க்­குற்­றங்கள் என்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை முன்­னி­றுத்தி நியாயம் கேட்க முஸ்­லிம்கள் முற்­ப­டலாம்.
அப்­போது இந்த நடு­நி­லைமை கேள்­விக்­குள்­ளாகி விடும்.
மொத்­தத்தில் போரின் இறு­திக்­கட்­டத்தில் தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்கள் விட­யத்தில் நியாயம் தேடு­வ­தற்கு வெளி­நா­டு­க­ளிடம் இருந்து கிடைக்­கின்ற ஒத்­து­ழைப்பு உள்­நாட்டில் ஏனைய இனங்­க­ளிடம் இருந்து கிடைப்­ப­தில்லை.
ஒரு மக்கள் கூட்­டத்­துக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு எதி­ராக கோரப்­படும் நியா­ய­மாகப் பாராது, அதனை அர­சியல் உள்­நோக்­கத்­துடன், இன­ரீ­தி­யான சிந்­த­னை­யுடன் பார்ப்­பதால் தான் இந்­த­நிலை.
யாழ், மன்னார் ஆயர்கள் அமெ­ரிக்க தூது­வ­ரிடம் போர்க்­குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யதால் தான், இந்த வேறுபட்ட மனோநிலையையும், கருத்து முரண்பாடுகளையும் உணர முடிந்துள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்கத்துக்கு பொறுப்புக்கூறல் முக்கியமானது என்று வலியுறுத்தப்படுகின்ற போதிலும், அதனை ஏற்கின்ற பக்குவம் தமிழரல்லாதோரிடம் இன்னமும் உருவாகவில்லை.
இந்தக் குறுகிய நோக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது அரசாங்கத்தைப் பகைக்கக் கூடாது என்ற எண்ணமா? படையினரைக் காப்பாற்றும் நோக்கமா? அல்லது இன்னமும் மறைந்து போகாத இனரீதியான சிந்தனையா?
இவற்றுள் எது காரணமாக இருந்தாலும், அது போருக்குப் பிந்திய இன நல்லிணக்கத்துக்குச் சவாலான விடயமாகவே இருக்கும்.
ஏனென்றால், காயங்களுக்கு மருந்திடாமல் வடுக்களை ஆற்றாமல் வலிகளைப் போக்கவோ, அதனை மறக்கவோ முடியாது.
(- ஹரி­கரன்)
« PREV
NEXT »

No comments