செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் என
விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளனர்.
பால்வெளி, அங்குள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் துணைக் கிரகங்கள் குறித்து
சர்வதேச அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கென பல
விண்கலங்கள் விண்ணில் ஏவப் பட்டுள்ளன.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தாவரங்கள், குறிப்பாக உணவு தானியங்களை
பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து டச்சு
பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங்
வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது.
செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற
ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14
தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.
ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன.
இது போல அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment