வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு வடமாண எல்லைக்குட்பட்ட மாவட்டங்களை இணைத்து நடாத்திய சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற மகுடத்தின் கீழ் கிளிநொச்சியில் உழவர் பெருவிழா சிறப்புற நடாத்தியது.
வடமாகாண அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள, சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் கு.மிகுந்தன், பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், ந.சிவசக்தி ஆனந்தன், மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதறை அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சுகாதார சுதேசிய வைத்திய அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் விவசாய அமைச்சின் உயர்அதிகாரிகள் உட்பட விவசாயப் பெருங்குடிமக்கள் கலந்து கொள்ள உழவர் பெருவிழா மண்டபம் மக்கள் கொள்ளாமல் நிறைந்து வழிய சிறப்புற நடைபெற்றது.
இங்கு கருத்துரைத்த விருந்தினர்கள் தமிழர் பண்பாட்டின் அடிநாதமாக பின்பற்றி வரப்படுகின்ற உழவர் பெருநாள் வடமாகாணசபை த.தே.கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வந்தபின் முதல் பெருவிழாவாக விவசாய பெருநிலமான கிளிநொச்சியில் நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டனர்.
இம்முறை ஏற்பட்டடிருக்கக்கூடிய வட்சியான சூழல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் அதை அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டினர்.
பெரும் போர்ச்சூழல் பொருளாதார தடைகள் என்பன நிலவிய காலங்களில் எமது மக்கள் தன்னிறைவாக உணவுத் தேவையை பூர்த்தி செய்து வாழ எமது விவசாயிகள் பெருமுழைப்பை அன்று வழங்கி இந்த மண்ணின் ஆரோக்கியத்தை காப்பாற்றி இருந்தனர் என்பதை நினைவுபடுத்தியதோடு அவர்களை பாராட்டினர்.
இன்று எமது மண்ணுக்கு ஏற்பட்டிருக்ககூடிய நெருக்கடிகளில் மிக முக்கியமாக எமது விவசாயிகளின் சந்தை வாய்ப்பை பாதிக்ககூடிய அன்னியர் நுழைவை தடுக்க வழிவகைள் ஏப்படுத்தப்படவேண்டும்.
எல்லாவற்றிலும் மேலாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இரக்கின்ற விவசாய நிலங்கள் பண்ணைகள் விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயம் தொடர்பான குள புனரமைப்பு குள வீதிகள் புனரமைப்பில் ஒப்பந்தகாரர்கள் தரமற்ற வேலைத்திட்டங்களை நிறைவேற்றி சில இடங்களில் பணமோசடி செய்வதாக கவலை வெளியிடப்பட்டது.
நிலத்தடி நீருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் விவசாய நிலங்களுக்கு ஏற்படக்கூடிய இடர்கள் தொடர்பாகவும் விருந்தினர்கள் தங்கள் பேச்சில் சுட்டிக்காட்டினர்.
ஒரு விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டிய தேவை உணத்தப்பட்டது. மழை மற்றும் இயற்கை இடர்களால் பாதிக்ப்படுகின்ற தமிழ் விவசாயிகள் நட்டஈடு வழங்கலின் போது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
விழா என்பது நாம் விழாமல் இருக்கிற செய்தியை வெளிப்படுத்துவதாக மேன்மைபடுத்தப்பட்ட கருத்து வெளியிடப்பட்டது.
உழவர் பெருவிழாவில் சிறந்த வீட்டுதோட்ட செய்கையாளர்கள் சிறந்த பாற்பண்ணையாளர்கள் என வெற்றியீட்டியவர்களுக்கு பிரதம விருந்தினராக கலந்தகொண்ட வடமாகாண முதல்வர் உட்பட்ட விருந்தினர்களால் விருதுகளும் பரிசில்களும் பாராட்டு பத்திரங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் போது வவுனியா நிருத்திக நிகேத கலாமன்ற மாணவ மாணவிகளால் மிகவும் சிறப்பான நடன விருந்தளிக்கப்பட்டது.
அத்தோடு தந்தை சிறையிலிருக்க மகன் நோயால் இறந்த கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கொடையாளர்களான ஈ.ஸ்.பி வர்த்தக தொழிலதிபராலும் காரைநகர் ஆலய தேவஸ்தானத்தாலும் ஒரு இலட்சம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டது
உழவர் பெருவிழா 2014ன் சிறப்பு நிகழ்வாக தமிழக கவிஞரும் பாடலாசிரியருமான கவிஞர் யுகபாரதி தலைமையில் கவிஞர்களான கை.சரவணன் வைத்தியகலாநிதி க.சுதர்சன் வைத்தியகலாநிதி கி.குரபரன் பொன்.காந்தன் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் ஆகியோர் கலந்துகொண்ட கவியரங்கம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்பெருவிழாவினை யாழ் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் இ.சர்வேஸ்வரா தொகுத்தளிக்க நன்றி உரையினை அமைச்சின் செயலாளர் வழங்க விழா சிறப்புற நிறைவுபெற்றது.
No comments
Post a Comment