Latest News

January 18, 2014

நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரித்தானியா
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கை குறித்து அடிக்கடி பேசப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments