யாழுக்கு நேற்று விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ் ரீபன் ரெப் நேற்று மாங்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தூதுவர் ரெப்பின் விருப்பத்திற்கமைய அவருக்கு மசாலா தோசையினை வழங்குவதற்காக குறித்த விடுதியினை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவுசெய்துள்ளார் என விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு 8 மணியளவில் ஆரம்பமாகிய இந்த இரவு விருந்துபசார நிகழ்வு சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றது. இந்த விருந்துபசாரத்தின் வடக்கின் தற்போதைய நிலை தொடர்பாக இருதரப்பினரும் சுவாரசியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் இச்சந்திப்புத் தொடர்பாகக் கருத்துக் கேட்டபொழுது, இச்சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் ஸ் ரீபன் ராப் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்காமல் சென்றுள்ளமையினால் தன்னால் இங்கு என்ன பேசப்பட்டது என்ற விடயத்தை தெரிவிக்க முடியாது என முதலமைச்சர் ஆணித்தரமாக ஊடகங்களுக்கு தெரிவித்து கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
இதேவேளை, இச்சந்திப்பில் வடபகுதி மக்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இம்மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருதரப்பினரும் பரஸ்பரம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
முதலமைச்சர் மற்றும் ஸ் ரீபன் ராப் ஆகியோரின் சந்திப்புத் தொடர்பாக முக்கியமான விடயங்கள் வெளிவரும் என நீண்டநேரமாக மாங்கோ விருந்தினர் விடுதியில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் முதலமைச்சரின் இப்பதிலுக்குப் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னதாக நேற்றுப் பிற்பகல் கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த ஸ் ரீபன் ரெப், அவர்களிடம் வடக்கின் நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்துள்ளார். இச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவில் வைத்தியர்கள், மதகுருமார் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்துகொண்டனர். பாது காப்புக் காரணங்களுக்காக இக்கு ழுவினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுத ஆயுதம்
No comments
Post a Comment