தன்னை இயேசு கிறிஸ்துவின் மறுபிறப்பு என கருதி கடந்த 35 வருடங்களாக இறை போதனை செய்வதில் நபரொருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் பிரேசில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலியா நகரைச் சேர்ந்த இன்றி கிறிஸ்டோ (66வயது)என்பவரே இவ்வாறு தன்னை இறைவனின் மகனது மறுபிறப்பாக தன்னைக் கருதி இயேசு கிறிஸ்து போன்று ஆடை தரித்து வாழ்ந்து வருகிறார்.
இன்றி கிறிஸ்டோவை பிரித்தானியா பிரான்ஸ் உள்ளடங்கலான உலக மெங்குமுள்ள நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஏற்றுக் கொண்டு அவரது கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.அவர்களில் சிலர் பிரேஸிலியா நகருக்கு வெளியிலுள்ள அவரது தேவாலய வளாகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
1979 ஆம் ஆண்டிலிருந்து உலக மெங்குமுள்ள 27 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள அவர். தனது சர்ச்சைக்குரிய கண்ணோட்டம் காரணமாக அமெரிக்கா, பிரித்தானியா, வெனிசுலா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் 40 க்கு மேற்பட்ட தடவைகள் பொலிஸாரால் கைது இன்றி கிறிஸ்டோவின் சீடர்களில் அநேகர் பெண்களாவர் அவர்களில் மிகவும் வயது கூடியவராக 86 வயது அபெருவெரி விளங்குகிறார். அவர் கடந்த 32 வருட காலமாக அவரைப் பின்பற்றி வருகிறார்.
அவரது சீடர்களில் இளையவரின் வயது 24 ஆகும். அவர் தனது இரண்டு வயது முதல் இன்றி கிறிஸ்டோவின் சீடராக உள்ளார்.
தனக்கென சொந்த திருச்சபையை செயற்படுத்தி வரும் அவரும் அவரது சீடர்களும் நமது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழம் மாம்பழம் போன்ற பழங்கள் மற்றும் மரக்கறிகளை உண்டு வாழ்கின்றனர்.
No comments
Post a Comment