Latest News

January 24, 2014

ஸ்ரீலங்கா நீதியரசரையே மாயகொலை செய்த அரசு ? தொடரும் மர்மங்கள்
by admin - 0

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சுந்தரம் ஸ்ரீ ஸ்கந்தராஜாவின் திடீர் மரணம், சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவே தீர்ப்பு வழங்கியிருந்தார்.

அந்த தீர்ப்பின் முக்கிய பங்கு அவருக்கே இருந்தது . அத்துடன் அந்த தீர்ப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றது.

ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போதும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானதே. இதனை மாற்றியமைக்க ராஜபக்ஷவினருக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்பு காரணமாக அரசாங்கம் அவர் மீது கோபத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அரசாங்கம் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வையும் வழங்கவில்லை. இவருக்கு பதிலாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த புவனேக அலுவிகார என்பவரை அரசாங்கம், உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது.

இந்த நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா திடீர் சுகவீனமடைந்தார். இவருக்கு பாரதூரமான நோய்கள் எதுவும் இருக்கவில்லை . 60 வயதான ஸ்ரீ ஸ்கந்தராஜா திடீரென சுகவீனமுற்றதுடன் அவரது மூளையும் செயலிழந்தது.

எந்த எதிரியோ கொடுத்த கடும் விஷம் காரணமாக நீதியரசருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சட்டத்துறையினர் மத்தியில் பலந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் தொடர் செய்திகள்


யாழில் மூன்றாம் வருட பல்கலைக்கழக மாணவி மர்ம தற்கொலை! அதிர்ச்சியில் மக்கள்!




« PREV
NEXT »

No comments