Latest News

January 02, 2014

லொறி குடை­சாய்ந்­ததில் 5 ஆயிரம் கிலோ பப்­பா­சிப்­ப­ழங்கள் சேதம்
by admin - 0

புத்­தளம்–கல்­பிட்டி பிர­தே­சத்­தி­லி­ருந்து பப்­பாசிப் பழங்­களை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிச் சென்றுகொண்­டி­ருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலை சிலாபம்– கொழும்பு பிர­தான வீதியில் காக்­காப்­பள்ளி பிர­தே­சத்­தி­லேயே இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது. வீதியில் சென்றுகொண்­டி­ருந்த இந்த லொறி காக்­காப்­பள்ளி–பண்­டா­ர­வத்தை பிர­தே­சத்­தி­லுள்ள வங்கு ஒன்றில் வைத்து வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் வீதி­யை­விட்டு விலகி வீதிக்­க­ருகில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்­திற்­குள்­ளா­கி­ய­து.
விபத்­திற்­குள்­ளான லொறியில் அதன் சாரதி மற்றும் உத­வி­யாளர் ஆகியோர் மட்­டுமே இருந்­துள்­ள­துடன் அவர்கள் சிறு காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். அத்­துடன் லொறியில் சுமார் ஐயா­யிரம் கிலோ  பப்­பா­சிப்­ப­ழங்கள் ஏற்ற ப்பட்டிருந்துள்ளதுடன் அவற்றுள் அதிக மானவை சேதத்திற்குள்ளாகியுள்ளன.


« PREV
NEXT »

No comments