Latest News

January 20, 2014

ஐங்கோண வடிவான பழங்கள்
by admin - 0

ஜப்பானைச் சேர்ந்த விவசாயிகள் ஐங்கோண வடிவிலான பழங்களை விருத்தி செய்து புதுமை படைத்துள்ளனர்.
'ஆ கொககு நோ அயொகன்' அல்லது அயொகன் சிட்ரஸ் பழங்கள் என அழைக்கப்படும் இந்தப் பழங்கள், எஹிமி பிராந்தியத்திலுள்ள யவதஹமா நகரில் நடைபெறவுள்ள நுழைவுப் பரீட்சைக் காலத்தையொட்டி விருத்தி செய்யப்பட்டுள்ளன.
"கொககு நோ அயொகன்" என்றால் 'பரீட்சைகளிலான வெற்றியின் இனிய மணம்' எனப் பொருள்படும்.
ஹிடுசி தசிபனா கழகத்தைச் சேர்ந்த விவசாயிகளான கெயிஸுகி நினொமியா, அகிஹிரோ நகவோகா மற்றும் ஜொ குபோடா ஆகியோரால் மேற்படி பழங்கள் விருத்திசெய்யப்பட்டுள்ளன.


« PREV
NEXT »

No comments