Latest News

January 05, 2014

தேவயானி ஆடை களைந்து சோதனை: வீடியோ போலி என அமெரிக்கா மறுப்பு!
by admin - 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடேவின் ஆடையை களைந்து சோதனை செய்யப்பட்ட வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இந்த வீடியோ காட்சி போலியானது என அமெரிக்கா மறுத்துள்ளது. விசா மோசடி குற்றச்சாட்டில் இந்திய துணைத்தூதராக பணியாற்றிய தேவ்யானி கோப்ரகடேவை அமெரிக்கா காவல்துறை கைது செய்தது. கைது செய்ததோடு மட்டுமல்லாமல் தேவ்யானியின் ஆடையை களைந்து காவல்துறையினர் சோதனை செய்தனர். சி.சி.டி.வி.யில் பதிவான இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், இந்திய துணைத் தூதர் தேவ்யானி சோதனை செய்யப்படும் காட்சி போலியானது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அதேவேளையில் தேவ்யானி கைது விவகாரம் இந்தியா-அமெரிக்கா இடையே விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

« PREV
NEXT »

No comments