போர் இடம்பெற்ற போது போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா எந்தச் சந்தர்ப்பத்திலும் கோரவில்லை என இலங்கை அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது. போர் நிறுத்தக் கோரிக்கையை அச்சமயம் விடுதலைப்புலிகள் சர்வதேசத்திடம் கோரி இருந்தனர். உண்மை நிலை அவ்வாறிருக்க இந்தியா முன்வைத்த போர்நிறுத்தக் கோரிக்கையை இரு தரப் பும் ஏற்கவில்லையென இப்போது அமை ச்சர் சிதம்பரம் கூறுவது ஏற்புடையதல்ல என இந்திய ஊடகங்களே குறிப்பிட்டுள்ளன.
தோண்டத்தோண்ட மனிதப் புதை
குழிக்குள் இருந்து வரும் மனித எலும்புக் கூடுகள், மனித மண்டை ஓடுகள், தமிழர்களுடையதா? ஒருவேளை காணாமல் போனோரின் எலும்புக்கூடுகளாக இருக்குமோ? போன்ற கேள்விகள் தொடர்கின்றன. ஆனால் பதில் தாமதமடைகின்றது. யார் இந்த மனித எச்சங்களை பரிசோதிப்பது? அவற்றின் உண்மைத் தன்மையை எங்ஙனம் அறிந்து கொள்வது?
மன்னார் மாந்தைச் சந்தி பிரதான பாதையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருக்கேதீஸ்வரம் செல்லும் ஏ31 பாதையின் ஒரு பகுதி.
தொகுதி தொகுதியாக 33க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் சர்வதேசத்தின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. அவை யாருடையவை? போரில் கொல்லப்பட்ட தமிழர்களுடையதா என்ற கேள்விகள் சர் வதேசம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்துள் ளன.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிப் பிரிவுக்கு மற்றொரு சாட்சியம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. போரின் போது கைதான தமிழ் இளைஞர்களின் பின் தலையில் சுடுவதை அந்தக் காணொளிகள் காட்டுகின்றன என அது குறிப்பிட்டது.
கண்டு பிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் சிலவற்றில் பின் மண்டைகளில் துளைகள் இருப்பதை நேரில் பார்த்த சாட்சியங்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே தமது காணொளிப் பதிவுக்கு சாட்சியங் கள் அவை என சனல் 4 தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மாந்தையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற குரலும் எழுந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மன்னார் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் அடிகளார் மற்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் அமெரிக்க போர்க்குற்ற விசாரணை நிபுணர் ஸ்டீவன் ஜே.ரெப் இலங்கை வந்துள்ளார். அவர் இலங்கை யில் பல அரசியல் பிரமுகர்களைச் சந் தித்து வருகிறார். அவரிடம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினர் மாந்தை புதைகுழி கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளனர்.
அவரின் விசாரணைக்கு இவ்விவகார மும் முக்கிய தடயமாகச் சேர்க்கப்பட லாம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க நிபுணரின் வரவு என்பது அமெரிக்காவின் மற்றொரு தீர்மானத்தின் வரைவு என்றே சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மார்ச் மாதம் நடை
பெறவுள்ள ஐ.நா.மனித உரிமைப் பேர வை மாநாட்டின் போது அமெரிக்கா காட்டமான தீர்மானமொன்றை கொண்டு வர இருப்பதாக எதிர்வு கூறப்படுகின்றது.
எனவே, அதற்கு முன்னதாக பேரவை யில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களின் நிலை என்ன? இலங்கை அரசு அவற்றை கடைப்பிடித்ததா? போருக்குப் பின் தமிழர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
இதுபோன்ற கேள்விகளுக்கு அவர் விடை கண்டுபிடிக்க முயற்சித்து வருகி றார். மன்னார் மாந்தை எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு அவரின் விசாரணைக்கு உதவிபுரியலாம் என்றும் குறிப்பிடப்படு கின்றது.
ஏ–31 பாதை சில மாதங்களுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. அப்போதும் இவை காணப்பட்டன என்றும் பின்பு அப்படியே மூடப்பட்டு பாதை அகலப்படுத்தப்பட்டது என்றும் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிடுகிறார்.
இப்போதும் தோண்டப்பட்டுள்ள பகுதி மேலும் ஆழமாக்கப்படுமேயானால் மேலும் பல எலும்புக்கூடுகள் கிடைக்க லாம் என்றும் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறவுள்ள சந்தர்ப்பத்தில் அவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதினால் விடயம் உடனடி சர்வதேச கவனத்திற்குச் சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சின் போர்க்குற்ற விசாரணை நிபுணர் ஸ்டீபன் ஜே.ெரப் வடக்கில் பல தமிழ் அமைப்புகளையும் சந்தித்துள்ளார். அவர்களில் மன் னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை பல விபரங்களை அவரிடம் தெரிவித்துள்ளார்.
போரின் போது இடம்பெற்ற குற்றங்களாக அவை கணிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் அமெரிக்க நிபுணரிடம் கூறிய விபரங்களை சர்வதேச ஊடகங்களுக்கும் வண. இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இலங்கை அரச விமானங்கள் மூன்று விதமான குண்டுகளை மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்குள் வீசியுள்ளன. கொத்துக்குண்டுகள் வீசப்பட்டன. அவை நிலத்தில் சிதறி விழுந்து மக்க ளைப் பலி கொண்டன.
இரண்டாவது வகை குண்டு நிலத்தில் விழுவதற்கு முன்பே வெடித்துச் சிதறி பரவலான தாக்குதலை ஏற்படுத்தும். மூன்றாவதாக இரசாயன குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு, தர்மபுரம், புதுமாத்தளன் மருத்துவ விடுதிகள் போரின் இறு திக்கால கட்டத்தில் இராணுவத்தின் குண் டுத் தாக்குதலுக்கு இலக்காகின. இறுதி எட்டு மாதங்களின் போது போரினால் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வருகின்றது.
வண.இராயப்பு ஜோசப் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யில் பொறுப்புக்கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் இலங்கை அரசு ஈடுபடவே இல்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணை போர்க்குற்றங்களுக்கு அவசியமெனக்குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களுக்கான வாழ்வாதார பொறிமுறையொன்று அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க அதிகாரி சிறைக்குச் சென்று சில தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களையும் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு தொடர்பாக சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவை இப்பிரச்சினையை உலகத் தமிழர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இம்மாத இறுதியில் காணி அபகரிப்பு பிரச்சினையை முன்வைத்து மாநாடொன்று இடம்பெறவுள்ளது. லண்டனில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
அத்துடன், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச தொண்டர் அமைப்பு என அரசு சாரா அமைப்புகளுக் கும் அழைப்பு விடுக்கப்படும். தமிழ்ப் பகுதிகளில் காணி அபகரிப்பு மிகச் சிறந்த மூலோபாயத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை கருதுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்கள் தங்கள் எல்லைகளை நோக்கிச் செல்லாவிட்டால் அந்த எல்லைகள் அவர்களைத் தேடி வந்து விடும் என பேரவை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் ஆகிய விபரங்களை ஆதாரங்களுடன் பெறுவதில் அது ஆர்வம் காட்டி வருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி விபரங்களை தருமாறு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
திட்டமிட்டுத் தமிழர்கள் வாழும் பகுதியிலேயே அவர்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்கு காணி அபகரிப்பு மிகச் சிறந்த தந்திரமாக பாவிக்கப்படுகின்றது. இது குறித்து தாயகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும். அதிலும் அவசரமாகச் செயற்பட வேண்டும்.
அதற்கு எதிராக தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஜனநாயக கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என புலம் பெயர் ஊடகங்களில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதற்கான திட்டங்களை வகுப்பதற்காகவே லண்டனில் தமிழர் மாநாடு கூட்டப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர் காணிகளில் சிங்களவர் பலவந்தமாகக் குடியேற்றப்பட்டு வருவதாக புலம்பெயர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
அங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அது தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர். வாகரை, கிரான் பகுதிகளில் தமிழர்களின் மேய்ச்சல் நிலக்காணிகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் திடீரென நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று மட்டக்களப்பு செங்கலடியிலும் தமிழ் விவசாயிகளின் 5 ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை சிங்களவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
புத்த பிக்குமாரின் தலைமையின் கீழ் படையினரின் பாதுகாப்புடன் இந்தக் குடியேற்றங்கள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர் துரைரத்தினம் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தம்மிடம் இது தொடர்பான ஆதாரங்கள் உண்டு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பிரித்தானிய தமிழர் பேரவை இது போன்ற முறைப்பாடுகளை சேகரித்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டின்போது காணி அபகரிப்பு தொடர்பாகவும் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது ஓர் இன ஒடுக்கல் என பேரவை சுட்டிக் காட்டி வருகின்றது. இருப்பினும் அறிக்கைகளோடு மாத்திரம் நின்று விடா மல் செயலிலும் எதிர்ப்பு காட்டப்பட வேண்டும்.
மிக அவசரமாக அரசின் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானிய தமிழர் பேரவையின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இம்முறை அமெரிக்கா இலங்கை அரசுக்கெதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவுள்ள நிலையில் காணி அபகரிப்புப் பிரச்சினையும் இல ங்கை அரசுக்கு எதிரானதாக அமையவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லோக்சபா எனப்படும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற வுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடொன்றில் இடம்பெறும் ஜன
நாயகத் தேர்தல் அது.
இந்தத் தேர்தல் உலகின் கவனத்தை கவர்ந்து வருவது வழமையானது. பல நாடுகள் இந்தியத் தேர்தலை உன்னிப்பாக உற்று நோக்குகின்றன.
ஆனால், வழமைக்கு மாறாக உலகத் தமிழர்கள் இம்முறை நடைபெறவுள்ள இந்தியத் தேர்தலை அவதானிக்க ஆரம்பித்துள்ளார்கள். புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இந்தத் தேர்தல் தொடர்பான கருத்துக்களும் கணிப்புகளும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இது வழமைக்கு மாறானது, அவ்வாறான ஈடுபாடு எதனால் வந்தது? ஈழத் தமிழர்களுக்கும் இந்தியத் தேர்தலுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இக்கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் கூற முடியாது. ஆனால் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட அவலம் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
அதில் இந்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய வகிபாகம் இருப்பதாகப் பின்பு வெளியான செய்தி கள் தெரிவிக்கின்றன. ஆனால் போர் நடைபெற்ற போது இது தொடர்பான எந் தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கால கட்டத்தில் இந்திய மக்கள் ஈழத்துப் போரில் இந்தியா தலையிட்டது தொடர்பாக எதுவும் அறிந்திருக்க வில்லை. உண்மைச் செய்திகள் வெளிவராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் இந்தியச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய லோக்சபாவுக்கான தேர்தல் இடம்பெற்றது. அதனால் தேர்தல் பாதிப்புகள் இடம்பெறாவண்ணம் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி போர்ச் செய்திகளை கட்டுப்படுத்தி இருந்தது.
இதனை இந்திய ஊடகங்கள் பல வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது என்றும் ஆய்வாளர் கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், இரண்டு ஆண்டுகளின் பின் அதாவது 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தலின் போது மக்கள் உண்மைகளைக் கண்டறிந்திருந்தனர். அதனால் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. வும் படுதோல்வி அடைந்ததை அனைவரும் அறிவர். எனவே, இந்திய தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினையும் கணிசமான பங்கு வகிக் கின்றது என்பது ஓர் இரகசியமான விடய மல்ல.
ஆனால், நிலைமை இவ்வாறிருக்க நிதி அமைச்சர் சிதம்பரம் தமிழ் நாட்டு மக்களிடம் இப்போது ஈழப்போர் குறித்து சில தகவல்களை குறிப்பிட்டு வருகிறார்.
போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ் வாறு அமைச்சர் சிதம்பரம் தேர்தல் பரப் புரைகளில் குறிப்பிட்டு வருகிறார்.
ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்பதை பலரும் குறிப்பிட்டு வருகிறார் கள். அதிலும் அவர் நான்கு ஆண்டுகளின் பின்பே இதனை தெரிவித்து வருகிறார்.
வீ.ஆர்.வரதராஜா
(ஊடகவியலாளர் - ஜேர்மனி)
No comments
Post a Comment