Latest News

January 12, 2014

பூர்வீக நிலமெங்கும் மனிதப் புதைகுழிகள்!
by admin - 0

மன்னார் மாந்தைப் பகு­தியில் மனி­தப்­பு­தை­கு­ழிகள் என்­கிற செய்தி ஊட­கங்­களை நிரப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன.
தோண்­டுதல் இடை­நி­றுத்­தப்­பட்டு, மீண்டும் ஆரம்­பித்­த­போது சிறுவன் ஒரு­வரின் உடல் எச்­சங்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இறந்­த­வர்­களின் உடல்கள் வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாமல், நீதி விசா­ர­ணைக்கு அகப்­ப­டாமல் புதைக்­கப்­பட்டால், அதனை மனித குலத்­திற்கு எதி­ரான குற்றம் என்று சர்­வ­தேச நீதி நிய­மங்கள் கூறும். இது குறிப்­பிட்ட இனத்­திற்கு எதி­ராக திட்­ட­மிட்ட வகையில் செய்­யப்­பட்டால், இன­வ­ழிப்பு என்று அர்த்­தப்­படும்.
அதைச் சொல்­வ­தற்கு, படிப்­பா­ளி­களும் (Scholars), அறச்­சீற்றக் கவசம் அணிந்­த­வர்­களும் சங்­கோ­சப்­ப­டு­கி­றார்கள்.
போர் நடை­பெற்ற பூமியில் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது புதிய விட­ய­மல்ல.. இறு­திப்போர் நிகழ்ந்த முள்­ளி­வாய்க்கால் பிர­தே­சத்தில் இன்­னமும் எத்­தனை புதை­கு­ழிகள் மறைந்து கிடக்­கு­மென்­பது, மர்­ம­மான ஒரு விட­ய­மா­கவே இருக்­கி­றது.
இருப்­பினும், கூட்­டுப்­ப­டு­கொ­லைகள் நிகழ்ந்­தி­ருக்­கக்­கூ­டிய நிகழ்­த­கவு அதிகம் இருப்­ப­தா­கவே, கண்­டெ­டுக்­கப்­படும் வயது வேறு­பா­டற்ற, உடல் எச்­சங்கள் புலப்­ப­டுத்­து­கின்­றன.
மாவி­லாற்றில் இருந்து முள்­ளி­வாய்க் கால் வரை இன­வ­ழிப்பின் சாட்­சி­யங்கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. சனல் -– 4 தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­பட்ட இளம் யுவ­திகள் கூட்டம், எங்கே என்று தெரி­ய­வில்லை.
இதற்­கான விசா­ர­ணையை நிலை­மாற்­றுக்­கால நீதிப் பொறி­முறை ஒன்றின் ஊடாக முன்­னெ­டுத்து, தென்­னா­பி­ரிக் கா போல, இன நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி விட­லா­மென்று சிலர் எண்­ண லாம். இலங்கை அதி­பரை நெல்சன் மண்­டேலா போன்று சித்­தி­ரிக்க முய­லலாம். ஆனால், அர­சியல் யதார்த்தம் இதற்குப் பொருத்­த­மாக இங்கு இல்லை என்­கின்ற உண்­மையை இவர்கள் புரிந்து கொள்­ள­வில்லை.
நடந்­தது மனி­தா­பி­மான யுத்தம் என் றும், ஒரு பொது மகனும் கொல்­லப்­ப­டவில்லை என்று இந்த அரசு 'முய­லுக்கு மூன்று கால்' கதை பேசும்­போது, நல்­லி­ணக்­கத்தை எந்தக் குழியில் தேட முடியும்?.
மூதூரில் படு­கொலை செய்­யப்­பட்ட 17 தமி­ழர்­களின் புதைக்­கப்­பட்ட உட­லங்­களை பல தட­வைகள் தோண்டி எடுத்து ஆய்வு செய்தும் இன்­னமும் நீதி கிட்­ட­வில்லை.
சன்­சோனிக் கமிஷன் பற்றி அதி­க­மாக அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. இந்த ஆணைக்­கு­ழுக்­களைப் பார்த்து, இலங்­கையில் ஜன­நா­யகம் உயிர்­வாழ்­கின்­ றது என்று பெருமை பேசிய நாடு­களும் உண்டு. LLRC ஐ பாராட்­டி­ய­ப­டியே பலர் அர­சியல் செய்­கி­றார்கள்.
பாது­காப்புப் படை­யி­னரால் இந்த அழி­வுகள் நிகழ்த்­தப்­பட்­டன என்­கிற குற்­றச்­சாட்டு எழும்­போது, அரச இயந்­தி­ரத்தின் முக்­கிய அங்கம் என்ற வகை­யிலும், அதி­யுச்ச அதி­கா­ரத்தைக் கொண்ட ஜனா­தி­ப­தியின் கீழுள்ள பாது­காப்பு அமைச்சின் முப்­படை என்ற வகை­யிலும், அதற்­கான முழுப்­பொ­றுப்­பினை அதி­பரே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.
இது அர­சி­ய­லுக்­கான அறம். அது இலங்­கையில் இருக்­கி­ற­தா­வென்று இருள்­
மி­குந்த மறை­வி­டங்­க­ளில் தான் தேடிப்­பார்க்க வேண்டும்.
நாங்­களும் சுயா­தீன விசா­ர­ணையை மேற்­கொள்ளமாட்டோம், நீங்­களும் அது­பற்றிப் பேச வேண்­டிய அவ­சி­ய­மில்லை, இறைமை மிக்க நாட்டின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யிட உங்­க­ளுக்­கென்ன உரிமை இருக்­கி­ற­தென, கேள்­விக்­க­ணை­களை தொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது இலங்கை அரசு.
மடியில் கனம் இல்­லை­யென்றால் வழி யில் பய­மெ­தற்கு? என்­கிற பழ­மொ­ழியை நீதி­ய­மைச்சர் ஹக்கீம் அரச தலை­வ­ருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
போப்­பாண்­ட­வரைச் சந்­திப்­ப­தாலும், நெல்சன் மண்­டே­லாவின் வாரி­சு­களை வைத்து உண்­மைக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான ஆணைக்­கு­ழுக்­களை அமைப்­ப­தாலும், பாலஸ்­தீன அதிபர் முகம்­மது அப்­பாசின் ஆத­ர­வினைப் பெறு­வ­தாலும், எதுவும் மாறி­வி­டப்­போ­வ­தில்லை.
இந்­து­ச­முத்­திரப் பிராந்­தி­யத்தில் அண்­மைக்­கா­ல­மாக ஏற்­பட்­டு­வரும் ஆதிக்­கப்­போட்­டியில் சிக்­ குண்டு போகா­ம­லி­ ருக்க இது­வரை உத­விய தந்­தி­ரோ­பா­யங்கள், இனி­மேலும் பல­ன­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பதைப் புரிந்து கொண்­டதால், சர்­வ­தேச அரங்கில் மேற்­கு­ல­கிற்கு எதி­ரான சக்­தி­க­ளுடன் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தும் நிலைப்­பாட்­டினை மஹிந்த ராஜ­பக் ஷ எடுக்க முயல்­கிறார்.
அதே­வேளை, தூத­ரக அதி­காரி தேவ்­யா­னியின் விவ­கா­ரத்தால், அமெ­ரிக்க- இந்­திய இரா­ஜ­தந்­திர உறவு நிலை சீர்­கு­லைந்து சிதைந்து விட வேண்­டு­மென்­கிற நப்­பா­சையும் இலங்கை அர­சிற்கு உண்டு.
நாடா­ளு­மன்ற தேர்தல் கால­மா­தலால், தேவ்­யா­னியின் பிரச்­சி­னையை வைத்து தம்மை தேச பக்­தர்­க­ளாகக் காட்­டிக்­கொள்ள காங்­கிரஸ் அரசு முயற்­சிப்­ப­தா­க வும் ஒரு விமர்­சனம் உண்டு.

ஆகவே, இந்­தி­யாவில் ஆட்சி மாறமுன், தற்­போ­தைய ஆட்­சி­யா­ளரின் ஆத­ர­வுடன், மார்ச் ஜெனீவா தீர்­மா­னத்தை நீர்த்­துப்­போக வைக்க வேண்­டு­மென இலங்கை அரசு அவ­ச­ரப்­ப­டு­கி­றது.
பேச்­ச­ளவில், சில உயர்­நிலை அதி­கா­ரி­க­ளாலும், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாலும் உச்­ச­ரிக்­கப்­படும் 'சுயா­தீன சர்­வ­தேச விசா­ரணை' என்­பது, வரு­கிற மார்ச்சில் ஐ.நா.மனித உரி­மைப்­பே­ர­வையில் முன்­வைக்­கப்­ப­ட லாம் என்­கிற அச்சம் அரச உயர் மட்­டத் தில் ஏற்­பட்­டு­விட்­டது போல் தெரி­கி­றது.
அனைத்­து­லகின் ஆத­ர­வினைத் திரட்ட, இராஜ கீரியும், அதன் படை­ப­ரி­வா­ரங்­க ளும் எட்­டுத்­தி­சை­க­ளிலும் பய­ணித்­துக்­கொண்­டி­ருப்­பதை காண்­கிறோம்.
மறு­பு­ற­மாக, ஒரு தேசிய இனத்தின் சுய­நிர்­ணய உரி­மையை நிரா­க­ரிக்கும் மார்க்ஸியவாதிகளும், ஒட்டுமொத்தப் புரட்சிக்கனவினைச் சுமந்தவாறு கோமா நிலையில் இருப்பவர்களும், புலி எதிர்ப்பு பிரசங்கிகளும், அதிகாரங்களைப் பகிர்ந்தால் நாடு உடைந்துவிடும் என்று சப்புக்கொட்டுபவர்களும், தம் பங்கிற்கு, தம்மாலான அரச ஆதரவு பரப்புரைகளை சர்வதேச மட்டத்தில் ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் தரப்பில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று பார்த்தால், எழுத்தா ளர் தீபச்செல்வன் சொல்வது போல, 'அரசியல் இயக்கம்' ஒன்று உருவாகுவதற் கான எதுவித அறிகுறிகளும் தென்பட வில்லை.
படிப்பாளிகள், படிப்பாளிகளோடு பேசு கிறார்கள். மக்கள் அதனை வேடிக்கை பார்க்கின்றார்கள். அவ்வளவுதான்.
இத­யச்­சந்­திரன்
« PREV
NEXT »

No comments