வெள்ளி மாலை 4.00 மணியளவில் இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சயிக்கிளில் சென்ற இருவர் குடும்பத்தினரிடம் எம்.பி எங்கே? எப்போ வருவார் யாழ்ப்பாணத்திலா கிளிநோச்சியிலா இங்கே வருவர் தானே?? என மிரட்டல் பாணியில் விசாரித்துச் சென்றுள்ளனர்
பின் ஒருசில மணிநேரத்தின் பின் மீண்டும் அதேபாணியில் அச்சுறுத்தும் வகையில் எம்பியின் கெளரவத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்து விசாரித்துவிட்டு அருகில் உள்ள வீதியில் நீண்ட நேரம் தரித்து நின்றதுடன் பல முறை வீட்டடை மோட்டார் சையிக்கிளில் வட்டமிட்டுள்ளனர்
சுமார் மாலை 8.00 மணிவரை வரை எம்பியின் வீடு உள்ள பகுதியில் குறித்த மர்ம நபர்களை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக குடும்பத்தினரும் அயலவர்களும் தெரிவித்தனர் .
இது தொடர்பில் குடும்பத்தார் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இவ் விடயம் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான திரு சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
அதையடுத்து வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சார் பூஜித ஜெயசுந்தரவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இது விடயமாக தான் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் சுமந்திரன் எம்.பியையும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தும் படியாகவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஆனால் சுமந்திரன் எம்.பியால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டில் இல்லாத நிலையில் குடும்பத்தினர் அச்சத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.
No comments
Post a Comment