Latest News

January 06, 2014

இலங்கை வந்தார் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர்
by admin - 0

அமெ­ரிக்க இராஜாங்க திணைக்­க­ளத்தின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதிக்­கான பணி­ய­கத்தில் போர்க்­குற்ற விவ­கா­ரங்­களை கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று திங்­கட்­கி­ழமை அதிகாலை 3 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.

இன்று இலங்கையை வந்தடைந்த ஸ்டீபன் ஜே ரெப் எதிர்­வரும் 11 ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை இலங்­கையில் தங்­கி­யி­ருப்பார் என்று அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

ஸ்டீபன் ஜே ரெப் இலங்­கைக்கு மேற்­கொள்ளும் இந்த விஜயம் அவ­ரு­டைய இரண்­டா­வது விஜ­ய­மாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்த விஜ­யத்­தின்­போது ஸ்டீபன் ஜே ரெப் அர­சாங்க உயர் அதி­கா­ரிகள், அர­சி­யல்­வா­திகள், சிவில் சமூ­கத்­தினர், நீதித்­து­றை­யினர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நிலை­மைகள் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஸ்டீபன் ஜே ரெப் தனது இலங்கை விஜ­யத்தின் போது ஆராய்வார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயம் அமைந்­துள்­ளது.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளுக்கு அமெ­ரிக்கா ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
« PREV
NEXT »

No comments