Latest News

January 06, 2014

யாழ். வடமராட்சி, தீவகம், முல்லை. கரையோரப் பாடசாலைகளுக்கு விடுமுறை
by admin - 0

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும்  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரையோரப் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை (06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். 

மேற்படி பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தன்னிடம் கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க, மேற்படி பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு மேற்படி கல்வி வலயப் பணிப்பாளர்களுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் எஸ்.சத்தியசீலன் கூறினார். 

தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (06) பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி பாடசாலைகளுக்கு  இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments