Latest News

December 10, 2013

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் லெம்பேட் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை
by admin - 0

உதயன் பத்­தி­ரி­கையின் மன்னார் பிராந்­திய ஊட­க­வி­ய­லாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரால் விசா­ரணை செய்­யப்­பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு நேற்று அழைக்­கப்­பட்டு இந்த விசா­ரணை ந­டை­பெற்­றுள்­ளது. தன்னை சுமார் 3 மணித்­தி­யா­லங்கள் அதி­கா­ரிகள் விசா­ரணை செய்­த­தாக லெம்பேட் தெரி­வித்தார்.மன்­னாரில் இருந்து அனுப்பி வைக்­கப்­பட்ட ஒரு செய்தி தொடர்­பா­கவே அதி­கா­ரிகள் தன்னை விசா­ரணை செய்­த­தா­கவும், அந்தச் செய்­திக்கும் தனக்கும் தொடர்பு இல்­லை­யென்று விசா­ர­ணை­யின்­போது தான் தெரி­வித்­த­தா­கவும் லெம்பேட் கூறினார்.  இது தொடர்பில் தன்­னி­ட­மி­ருந்து வாக்­கு­மூலம் ஒன்றைப் பெற்­றுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் தேவைப்­ப­டும்­போது அழைத்தால் மீண்டும் விசா­ர­ணைக்­காக வரவேண்டும் என தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments