38 பேர் காயம்; மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
மாங்குளம் பனிக்கன்குளம் பால த்தில் பஸ் ஒன்று தடம்புரண்ட தில் 38 பயணிகள் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட பொது வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மாங்குளம் பனிக்கன்குளம் பால த்தில் பஸ் ஒன்று தடம்புரண்ட தில் 38 பயணிகள் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட பொது வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் மேலும் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து பயணிகளுடன் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மாங்குளம் பனிக்கன்குளப் பாலத்தை அண்மித்தபோது நிலைதடுமாறி வீதியை விட்டு விலகித் தலைகீழாக தடம்புரண்டது. இதில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமடைந்தனர். பஸ் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி காயம் எதுவுமின்றி அருகிலுள்ள மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment