சா்வதேச மனித உரிமைகள்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று பி.ப3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணாமல் போன மற்றும் சிறைச்சாலையில் வாடும் உறவுகளதும் விடுதலையையும் நலனையும் வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் அவா்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் வரவேற்புரையையும்,
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரசார செயலாளா் திரு.எஸ்.இளங்கோ தலைமை உரையினையும் ஆற்றினா்.
தொடா்ந்து மனித உரிமை செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரபல சடத்தரணியுமான திரு கந்தசாமி அவா்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அருட்பணி ராஜ்குமார் திருமதி பத்மினி சிதம்பரநாதன், கிராமிய உழைப்பாளா் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு மன்றத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளா் திரு. இன்பம், வல்வெட்டித்துறை நகர சபை உபதவிசாளா் திரு சதீஸ் ஆகியோரும் ஆற்றினா். நவநீதம்பிள்ளை அம்மையாருக்கான மனு வாசிக்கப்பட்டதைதொடா்ந்து சக்தி அவா்களது நன்றிஉரையுடன் ஒன்றுகூடல் நிறைவு பெற்றது.
No comments
Post a Comment