Latest News

December 16, 2013

மலையகத்தில் இந்து ஆலயங்களை ஒழிக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகின்றது -சலோபராஜா
by admin - 0

நாட்டின் மத்­திய மாகாண சபையில் இந்துக் கலா­சாரம் மற்றும் தமிழ் ­கல்வி அமைச்­சினை இல்­லாமல் செய்­தது போன்று மலை­ய­கத்தில் இந்து ஆல­யங்­க­ளையும் அழித்­தொ­ழிக்கும் திட்டம் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது என இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­னியின் பிரதிப் பொதுச் செய­லா­ளரும், மலை­யக சமூக அபி­வி­ருத்திக் கழகத் தலை­வ­ரு­மான இரா.சலோ­ப­ராஜா தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கை­யில், நாட­ளா­விய ரீதியில் இந்து ஆல­யங்கள் தாக்­கப்­ப­டு­வதும் சிலைகள் உடைக்­கப்­ப­டு­வதும் சர்­வ­சா­தா­ர­ண­மா­கி­யுள்­ளது. சில தினங்­க­ளுக்கு முன்னர் உடு­வரை தோட்ட ஸ்ரீ கா­ளியம்மன் ஆலயம் தாக்­கப்­பட்டு, அங்­குள்ள அம்மன் சிலையும் மிரு­கத்த­ன­மா­ன முறையில் அடித்து உடைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­ச்சி­யாக இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்­டி­ருப்­பதால் இதற்கு பின்னால் பெரும் பலம் பொருந்­திய பின்­னணி இருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. பெருந்­தோட்­டப் பகு­தி­களில், இந்து ஆல­யங்­களை அழித்­தொ­ழிக்கும் திட்­ட­மா­கவே ஆலய உடைப்பு விவ­கா­ரங்­களை கருத வேண்­டி­யுள்­ளது. இது விட­யத்தில் மலையகத் தலை­மைகள் நீண்ட மெள­னத்தை சாதித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந் நிலையும் எமது சமூ­கத்­திற்கு பெரும் ஆதங்­கத்­தையும், பலத்த சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பெருந்­தோட்ட மக்கள் பசி, பட்­டி­னி­யுடன் இருந்த போதிலும் ஏழ்­மையின் மத்­தி­யிலும் தமது உயி­ரிலும் மேலாக இந்து ஆல­யங்­க­ளையும் தெய்­வங்­க­ளையும் போற்றி பூஜித்து வரு­கின்­றனர். இத்­த­கைய ஆல­யங்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­வதை அம்­மக்­களால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை.

ஆகை­யினால் இந்து ஆல­யங்களை சேதப்­ப­டுத்தல் மற்றும் சிலை உடைப்பு விவகாரம், வடக்கு, கிழக்கு பிரச்சினை போன்று, சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை என்றார்.
« PREV
NEXT »

No comments