Latest News

December 08, 2013

ஜெனீவா புதைகுழி சிக்குமா இலங்கை? சத்ரியன்
by admin - 0

இன்னும் சுமார் நான்கு மாதங்­களில் ஆரம்­ப­மாகப் போகும், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் பேர­வையின், 25 ஆவது அமர்வை எதிர்­கொள்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் அர­சாங்கம் இப்­போதே இறங்­கி­விட்­டது.
அண்­மையில், கொமன்வெல்த் மாநாட்­டுக்­காக வந்­தி­ருந்த, பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன், வரும் மார்ச் மாதத்­துக்குள் இலங்கை அர­சாங்கம் உள்­ளக விசா­ர­ணை­களை நடத்தத் தவ­றினால், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அழுத்தம் கொடுப்போம் என்று எச்­ச­ரித்து விட்டுச் சென்­றி­ருந்தார்.
ஆனால், எத்­த­கைய வெளி­யக அழுத்­தங்­க­ளுக்கும் அர­சாங்கம் அடி­ப­ணியப் போவ­தில்லை என்று அதற்குப் பின்னர், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தார். கடந்­த­வாரம் நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை நினை­வு­ப­டுத்தி, எத்­த­கைய காலக்­கெ­டுக்­க­ளுக்கோ, அச்­சு­றுத்­தல்­க­ளுக்கோ அர­சாங்கம் அடி­ப­ணி­யாது என்று தெளி­வாக அறி­வித்­துள்ளார்.
எனினும், வரும் ஜெனீவா கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்­ன­தாக, சில நடவ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்கத் தொடங்­கி­யுள்­ளது.
கடந்த 29 ஆம் திகதி லண்­டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் நடந்த பிரான்செஸ் ஹரி­சனின், முடி­வுறா போர் என்ற ஆவ­ணப்­படம் தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்ட சனல் - 4 ஆவ­ணப்­படத் தயா­ரிப்­பாளர், கெலும் மெக்ரே, இலங்கை அர­சாங்கம், வரும் மார்ச் மாதத்­துக்கு முன்னர் பல ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிக்கும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
அதா­வது, அவர் குறிப்­பிட்­டதன் அர்த்தம், ஜெனீவா கூட்­டத்­தொ­டரை எதிர்­கொள்­வ­தற்கு – சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக இலங்கை பல தயார்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­ளலாம் என்­ப­தே­யாகும். ஐ.நா மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் வரு­கைக்கு முன்­ன­தாக, காணா­மற்­போனோர் தொடர்­பாக விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட ஆணைக்­குழு இப்­போது தக­வல்கள் திரட்டி வரு­கி­றது.
அதே­வேளை, சனத்­தொகை புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம், போரினால் ஏற்­பட்ட இழப்­புக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கி­றது.
இவை­யெல்லாம் ஜெனீவா கூட்­டத்­தொ­டரை எதிர்­கொள்­வ­தற்­கான சில தயார்­ப­டுத்­தல்கள் தான்.
இது­மட்­டு­மல்ல, கடந்­த­வாரம் திடீ­ரென பாது­காப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த, தேசிய பாது­காப்பு ஊடக நிலையம் கலைக்­கப்­பட்­டது.
போர்க்­கா­லத்தில், போர் பற்­றிய தக­வல்­களை வெளி­யி­டவும், ஊட­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும், தேசிய பாது­காப்பு ஊடக நிலையம் அமைக்­கப்­பட்­டது.
ஒரு­வ­கையில் இது ஊட­கங்கள் மீது அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது.
அண்­மையில், மாவீரர் தினத்­திற்கு முன்னர் கூட, புலி­களைப் புகழும், அவர்­களை மரி­யா­தைக்­கு­ரி­ய­வர்­க­ளாகப் போற்றும் ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஊடக மத்­திய நிலையப் பணிப்­பாளர் லக்ஸ்மன் ஹுலு­கல்ல எச்­ச­ரித்­தி­ருந்தார்.
ஆனால் சில நாட்­க­ளி­லேயே தேசிய பாது­காப்பு ஊடக மத்­திய நிலையம் கலைக்­கப்­பட்டு, அவ­ரது பத­வியும் பறி­போ­னது.
போருக்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்த நிலையம், போர் முடிந்து நான்­கரை ஆண்­டு­க­ளா­கியும் ஏன் செயற்­ப­டு­கி­றது, எதற்­காக ஊட­கங்­களை மிரட்­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்­டு­களின் விளை­வா­கவே அது கலைக்­கப்­பட்­டுள்­ளது. இதுவும் கூட ஜெனீ­வா­வுக்­கான ஒரு தயார்­ப­டுத்தல் தான்.
ஆனால், அர­சாங்கம் எத்­தனை ஆணைக்­கு­ழுக்­களை அமைத்­தாலும், அடுத்த ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் இருந்து தப்­பிப்­ப­தற்கு அர­சாங்­கத்­துக்கு உள்ள ஒரே வழி, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக விசா­ரிக்க நம்­ப­க­மான - நடு­நி­லை­யான ஒரு விசா­ர­ணையை நடத்­து­வது தான்.
ஏற்­க­னவே, இலங்கை அர­சாங்கம் நிய­மித்த விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் எல்­லாமே, இரா­ணு­வத்­துடன் தொடர்­பு­டை­யவை என்றும், அவை நடு­நி­லை­யா­ன­வை­யல்ல என்றும் பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்­தி­ருந்தார்.
அது­மட்­டு­மன்றி, மூதூரில் படு­கொலை செய்­யப்­பட்ட தமது 17 பணி­யா­ளர்கள் தொடர்­பாக, கடந்­த­வாரம், அக்சன் பெய்ம் நிறு­வனம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை இரா­ணு­வமே அதை செய்­த­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.
இலங்கை அர­சாங்கம் நியா­ய­மான உள்­ளக விசா­ர­ணையை நடத்தும் என்று தாம் நம்­ப­வில்லை என்றும், சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்டால், கொலைகள் தொடர்­பான சாட்­சி­யங்­களை சமர்ப்­பிக்கத் தயார் என்றும் கூறி­யுள்­ளது.
இது­வரை இலங்கை அர­சாங்கம் நடத்­திய உள்­ளக விசா­ர­ணைகள் முழு­மை­யா­கவோ, நம்­ப­க­மா­ன­தா­கவோ அமை­யாத நிலையில் தான், இதை­விட சுதந்­தி­ர­மான ஆணைக்­கு­ழு­வொன்றை அமைக்க அர­சாங்கம் முன்­வ­ராது என்ற கருத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதுதான் இன்று முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக உள்­ளது.
போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­டாமல், சர்­வ­தேச சமூகம் ஓயப் போவ­தில்லை. அவர்­களால் இனி ஓயவும் முடி­யாது.
ஏனென்றால், இதற்கு முன்னர், பொது­வாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், பொறுப்­புக்­கூற வேண்டும் என்று தான் சர்­வ­தேச சமூகம் கூறி வந்­தது.
ஆனால் இப்­போது, நிலைமை அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்ந்து விட்­டது.
நேர­டி­யா­கவே போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு, பதி­ல­ளிக்க வேண்டும் என்றும் சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்த வேண்டும் என்றும், அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடுகள் வலி­யு­றுத்த ஆரம்­பித்து விட்­டன.
சில கால­மாக அமை­தி­யாக இருந்து வந்த அமெ­ரிக்­காவும் இப்­போது கடு­மை­யாக எச்­ச­ரிக்கும் தொனியில் கருத்து வெளி­யிடத் தொடங்­கி­யுள்­ளது.
கடந்­த­வாரம், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், வொஷிங்­டனில் கருத்து வெளி­யிட்ட போது, இலங்கை அர­சாங்கம் உள்­ளக விசா­ர­ணையை நடத்­தாது போனால் சர்­வ­தேச சமூகம் பொறு­மை­யி­ழந்து விடும் என்று எச்­ச­ரித்­துள்ளார்.
றொபேட் பிளேக்­கிற்குப் பதி­லாக அண்­மையில் இந்தப் பத­வியை ஏற்ற நிஷா தேசாய் பிஸ்வால், வெள்ளை மாளி­கைக்கு மிகவும் நெருக்­க­மா­னவர்.
இந்தக் கால­கட்­டத்தில் அவ­ரது இந்தக் கருத்து, முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது.
பெரும்­பாலும், அடுத்த ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­படும் தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா, முன்­வைக்­காது என்றே கரு­தப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே இரண்டு தீர்­மா­னங்­களை அமெ­ரிக்கா முன்­வைத்தும் உரிய பலன் கிட்­டாத நிலையில், இப்­போது பிரித்­தா­னி­யாவை அது உசார்­ப­டுத்தி விட்­டுள்­ள­தாகத் தெரி­கி­றது. அடுத்த ஜெனீவா களத்தை பிரித்­தா­னி­யாவே திறந்து விடும் வாய்ப்­புகள் உள்­ளன.
ஏனென்றால், தற்­போது, பிரித்­தா­னியா போர்க்­குற்­றங்கள் குறித்த சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது.
கடந்­த­வாரம் கூட பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் வில்­லியம் ஹேக், நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச விசா­ரணை பற்­றிய எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார்.
இந்­த­நி­லையில், ஜெனீ­வாவில் சர்­வ­தேச விசா­ரணை என்­பதை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அடுத்­த­கட்ட நகர்வு அமை­யப்­போ­வது பெரும்­பாலும் உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்­த­நி­லையில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் சுதந்­தி­ர­மான உள்­ளக விசா­ர­ணைக்கு கொடுத்த காலக்­கெடு இன்­னமும் கூட முடி­வு­ற­வில்லை.
அதற்குள் எதை­யா­வது செய்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கலாம்.குறிப்­பாக தென்­னா­பி­ரிக்­காவின் துணை­யுடன் உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மிக்கும் யோசனை ஒன்றை அர­சாங்கம் கைவசம் கொண்­டுள்­ள­தாக தெரி­கி­றது.
என்­றாலும், இது­தொ­டர்­பாக, பேச்சு நடத்த இலங்கை வர­வி­ருந்த தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிம் இப்ராகிம், தனது பயணத்தை பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் மண்டேலாவின் மரணத் துக்கு முன்னரே அந்தப் பயணம் பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும், ஜெனீவாவில் காத்திருக்கும் ஒரு புதை குழியைப் பற்றி அரசாங்கத்தினால் அலட்சியமாக இருந்து விடமுடியாது.
ஏனென்றால், சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, வியட்நாம் போன்ற நட்பு நாடுகள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டாலும். ஜெனீவா இன்னமும் இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமான ஒரு களமாகவே இருந்து வருகிறது,
இந்தப் பாதகமான களத்தை சாத கமாக்கிக் கொள்ள இலங்கை எல்லா முயற்சிகளையும் எடுக்கவே முனையும். ஆனால் அவை அமெரி க்கா, பிரித்தானியா. கனடா போன்ற நாடுகளை திருப்திப்படுத்தும் அள வுக்கு வலியதாக இருக்குமா என்பதே முக்கியமானது.
« PREV
NEXT »

No comments