
ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானிய பாராளுமன்றில் நீண்டகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், ஈழத்தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்பவருமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா எம்.பி. அவர்களின் சகோதரனின் இழப்பை முன்னிட்டு அவரின் ஆத்ம சாந்தி வேண்டி நாளை (15-12-13) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஈலிங் அம்மன் ஆலத்தில் மதியம் 12:00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழில் கலந்து கொண்டு இயற்கை எய்திய அமரர் திரு. சுரிந்தர் சர்மா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கும் அதே வேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மட்டுமன்றி, பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு எம்மில் ஒருவராக வாழ்ந்துவரும் திரு.விரேந்திர சர்மா எம்.பி. அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழர்களாகிய நாம் எமது அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் முகமாகவும் இந்த விசேட நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இடம்: 5 Chapel Road, West Ealing, W13 9AE நேரம்: 12:00
காலம்: 15-12.2013 (Sunday)
No comments
Post a Comment