வட மாகாணசபையில் அதிகாரத்துக்காக நடந்து வருகின்ற இழுபறி யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில், வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு, சி.வி.விக்னேஸ்வரன் முதல்வராக பதவியேற் றுள்ளது தான், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வின் உச்சக்கட்டம் என்றும், இதற்கு மேல் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றும் அண்மை யில் பி.பி.சி. பேட்டி ஒன்றில், கேள்வி எழுப்பியிருந்தார் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த.
இதே சுசில் பிரேம் ஜயந்த தான், சில மாதங்களுக்கு முன்னர், மாகாண சபைக்கு அப்படி என்ன அதிகாரம் உள்ளது? அது விக்னேஸ்வரனுக்குத் தெரியாது, தனக்குத் தான் தெரியும் என்று இளக்காரமாக கூறியவர்.
மேல் மாகாண முதல்வராக முன்னர் பதவி வகித்தவர் சுசில் பிரேம் ஜயந்த்.
அதாவது மாகாணசபைகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்ற தொனியில் அப்போது பேசியவர் தான், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. விக்னேஸ்வரன் முதல்வராகி விட்டார் இனியென்ன தேவைப்படுகிறது அவர்களுக்கு? என்று கேட்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், ஒன்றுமில்லாத மாகாணசபை என்று கூறிவிட்டு, இப்போது எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டது போல அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், நடைமுறையில் வட மாகாணசபை தனது நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒரு பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண அரசுக்கும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநருக்கும் இடையில் இழுபறிப் போர், நடந்து வருகிறது.
புதிய மாகாணசபை, தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம், இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் தேவையில்லை என்றும் சிவில் ஆளுநர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
இது தொடர்பாக ஒன்றுக்கு இரண்டு முறை மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாணசபையில் நிகழ்த்திய ஒவ்வொரு உரைகளிலும் இதனை வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனாலும், அரசாங்கம் அதையெல் லாம் கண்டுகொள்ளாதிருக்கின்ற அதேவேளை, மாகாண ஆளுநர் சந்திரசிறி தமது பிடியை மேலும் மேலும் இறுக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன.
செயலாளர்களை அடுத்தடுத்து மாற்றிய ஆளுநர் அடுத்து, உயர்மட்ட அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு, மாகாண அரசுக்கு எதிராகச் செயற்படத் தூண்டி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, மாகாண பிரதம செயலர், ஆளுநரின் இந்த அதிகார அத்துமீறலுக்குப் பெரிதும் துணைபோவதாக மாகாணசபையின் முதல்வரும், அமைச்சர்களும், உறுப்பினர்களும் விசனங்களை வெளியிட்டுள்ள னர்.
அண்மையில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர் விக் னேஸ்வரன், ஆளுநரின் கைத்தடிகளா கச் செயற்படும் மாகாண செயலாளர்களை கடுமையாக கண்டித்திருந்தார்.
அவர்கள் நியாயமாகச் செயற்பட வேண்டும் அல்லது தாமாக விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவி டின் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந் தார்.
சில அதிகாரிகள், ஆளுநருக்கும் மாகாண அரசுக்கும் இடையில் உள்ள இடைவெளியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குளிர்காய முற்படுகின்றனர் என்பது தெளிவாகவே தெரிகிறது.
அதாவது, வடக்கில் இதுவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண அரச நிர்வாகம் இல்லாத நிலை யில், அரச அதிகாரிகள் பலரும் தம் மைக் குறுநில மன்னர்களாகவே கருதிக் கொண்டு செயற்பட்டனர்.
அத்தகையவர்களால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங் கம் தம் மீது செல்வாக்குச் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அவர்கள் தான், ஆளுநரின் பெயரில் அத்துமீற முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.அதேவேளை, மாகாண அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இத்தகையதொரு இடைவெளியை ஏற்படுத்தி, நிர்வாகத்தை குழப்ப ஆளுநர் முனைவதாகவும் தெரிகிறது.
எவ்வாறாயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை, நிர்வாகத்தை திறம்பட வழி நடத்தும் பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டிய நிலையிலும், இத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்ட வேண்டிய நிலையிலும் உள்ளது.
மக்களுக்கு சேவையாற்ற, அதிகாரிக ளும் ஆளுநரும் இடமளிக்கவில்லை, முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று மாகாணசபையால் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்க முடியாது.
அது ஏற்கும்படியான ஒரு காரணமாகவும் இருக்க முடியாது.
-"ஆடத்தெரியாதவன் மேடை
கோணல்'' என்றானாம் என்று, கடந்த நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா.
எனவே, அடுத்து என்ன செய்யலாம்? என்று தீர்மானிக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் வட மாகாணசபை உள்ளது.
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் இப்போதைக்கு மாற்றப்படப் போவதில்லை என்பதை உணர முடிகிறது.
அவ்வாறு மாற்றப்பட்டால் கூட, அடுத்து வருபவரும் இதே மனோபாவத்துடன் செயற்படுபவராக இருந்து விட்டால், என்ன செய்ய முடியும்?
எனவே, ஆளுநரினதும், அரச அதிகாரிகளினதும் அதிகார இழுபறிக்குள் அகப்படாமல் நிர்வாகத்தை நடத்தும் ஒரு பொறிமுறையை வட மாகாணசபை உருவாக்கிக் கொண்டால் தான், சாதிக்க முடியும்.
அதிகாரிகள், ஆளுநர் முட்டுக்கட்டை என்று தொடர்ந்து காரணம் கூறிக் கொண்டிருந்தால் மக்களும் சலித்துப் போவார்கள்.
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகார எல்லைகளை – அதன் ஓட்டைகளை புரிந்து கொண்டு சபை நிர்வாகத்தை திறம்பட நடத்த முற்படுவதே மாகாணசபைக்கு உள்ள மிகப் பெரிய சவால்.
இதற்கு, ஆளுநரிடமோ, அதிகாரிகளிடமோ சரணடைந்து விடுதல் என்று பொருளல்ல.
சரணடைந்தும் விடாமல், அதேவேளை, தமிழ் மக்களுக்கும், வெளியு லகிற்கும் வட மாகாணசபை எதிர்கொள்ளும் நெருக்கடியை உணர்த்தி, வெளிப்படைத்தன்மையுடன் மாகாணசபை செயற்பட முனைந்தால், அது பயனுள்ள ஒரு பெறுபேற்றைத் தரக் கூடும்.
ஒரு திட்டத்தை மாகாணசபை செயற்படுத்த முனையும் போது, அது யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதில் தொடங்கி, அதனை தட்டிக்கழிக்கும், அல்லது அதில் குறுக்கிட முனைபவர் கள் தொடர்பான அத்தனை விபரங்க ளும் உடனுக்குடன் பகிரங்கப்படுத்தப்படுமானால், அரசு நிர்வாகத்தின் மீது மக்களின் கவனம் அதிகம் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.
அத்தகைய கவன ஈர்ப்பு, மாகாணசபையின் மீதுள்ள நம்பகத்தன்மையை பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, அதன் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடுகள் தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை, இன்னொரு முனை யில் வடக்கு மாகாணசபை ஒரு நொண் டிக் குதிரை என்ற உண்மையை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியமானது.
ஏனென்றால், கிட்டத்திட்ட இந்த மாகாண சபையையே, தமிழர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு போன்று அரசாங்கம் கூறத் தொடங்கியுள்ளது.
இந்த ஓட்டைப் பாத்திரத்தை வைத்து, பிச்சையெடுக்கத் தான் முடியுமே தவிர, தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்க முடியாது என்ற உண்மை இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் தெளிவாகப் புரிய வைக்கப்பட வேண்டும்.
இந்த இருமுனை நகர்வுகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படுவதன் மூலம், வடக்கு மாகாணசபையை பலப்படுத்திக் கொள்ளவும், வாக்களித்த மக் களின் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.
வட மாகாணசபையை ஒரு டம்மி நிர்வாக அமைப்பாக கருதிக் கொண்டு அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை, வடக்கு மாகாணசபையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.
தனியே ஆளுநர் புகழ்பாடுவதற்காகவே அது செயற்படுகிறது.
மாகாணசபையின் வரவு ------- செலவுத் திட்டம் கூட அதில் பதிவேற்றப்படவில்லை.
முதலமைச்சரின் ஒரு படம், முகவரி தவிர வேறு எதுவும் அதில் கிடையாது.
ஒரு தொலைபேசி இலக்கம் கூட இல்லாத முதல்வராக சி.வி.விக்னேஸ் வரன் இருக்கிறார்.
ஆளுநர், மற்றும் பிரதம செயலரின் அத்தனை விபரங்களும் படங்களுடன் பதிவாகியுள்ளன.
அமைச்சர்கள் பற்றிய விபரமோ அதன் செயற்பாடுகள் குறித்த விபரங் களோ எதுவும் அதில் கிடையாது.
ஆனால், ஆளுநர் வழிபாடு செய்வது தொடக்கம் அத்தனை விபரங்களும் அதில் பதிவு செய்யப்படுகின்றன.
இப்படியான நிலையில், வட மாகா ணசபை தனது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ ஊடகத்தை கட்டமைப்பது, அவசிய மானதாகவே உள்ளது.
இதன் மூலம், மாகாண அரச நிர் வாகத்தின் செயற்பாடுகளையும், திட் டங்களை நிறைவேற்ற முடியாமைக் கான காரணங்களையும், வெளிப்படுத்த முடியும். அது மாகாண அரசை பலமுள் ளதாக மாற்றும்.
இல்லாவிடின், அடுத்த ஐந்து ஆண்டு களும், மாகாண அரசு, ஆளுநர் முட் டுக்கட்டை போடுவதாக புலம்பிக் கொண்டே திரிய வேண்டியிருக்கும்.
No comments
Post a Comment