Latest News

December 15, 2013

பொருளாதார தடையா? போர் குற்ற விசாரணையா ?
by admin - 0

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்­கத்தில் உள்ள அர­சாங்­கத்­துக்கு, எதிர்க்­கட்­சி­களும் பேதியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளன.
கடந்த வாரம், நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ஐ.தே.க. உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ, இலங்­கைக்கு எதி­ராகப் பொரு­ளா­தாரத் தடைகூட விதிக்­கப்­ப­டலாம் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.
ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் இலங்­கைக்கு எதி­ராகக் கடு­மை­யா­ன­தொரு நட­வ­டிக்­கையில் இறங்க வாய்ப்­புகள் உள்­ளன என்­பதே இப்­போ­துள்ள கணிப்­பாகும்.
இதனை அர­சாங்கத் தரப்பும் மறுக்கத் தயா­ராக இல்லை.
இதனால் தமக்கு ஆத­ர­வான அணியைத் தயார்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் அர­சாங்­கமும் ஏற்­க­னவே இறங்­கி­யுள்­ளது.
குறிப்­பாக, ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில் அங்கம் வகிக்கும் நாடு­களில், இலங்­கைக்கு ஆத­ர­வ­ளிக்கக் கூடிய நாடு­களை அடை­யாளம் கண்டு, அவற்றின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராகி வரு­கி­றது.
இதற்கு முன்­னைய ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், இம்­முறை அர­சாங்­கத்­துக்கு அதி­க­ளவு நெருக்­கடி ஏற்­ப­டலாம்.
ஏனென்றால், ஏற்­க­னவே இரண்டு காலக்­கெ­டுக்கள் கொடுக்­கப்­பட்ட போதிலும், அவற்றை அர­சாங்கம் நிறை­வேற்றத் தவ­றி­யதால், மேற்­கு­லக நாடுகள் குறிப்­பாக, அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் கடுப்பில் இருக்­கின்­றன.
இதனால், அடுத்­த­கட்­ட­மான சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­து­வதே ஒரே வழி என்ற நிலைக்கு இந்த நாடுகள் தள்­ளப்­பட்­டுள்­ளன.
அதற்­கான முன்­மு­யற்­சி­களை வரும் மார்ச் மாத கூட்­டத்­தொ­டரில் ஐ.நா. மனி­த­ உ­ரிமைகள் பேரவை முன்­னெ­டுப்­ப­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ளன.
ஆனால், சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை, ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையின் ஊடாக நிய­மிப்­பதில் சட்­ட­ரீ­தி­யான தடைகள் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.
சர்­வ­தேச விசா­ரணைப் பொறி ­மு­றையை ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வை­யினால் அமைக்க முடி­யாது என்று இலங்கை அர­சாங்கம் நெடு­நா­ளா­கவே கூறி வரு­கி­றது,
ஐ.நா. பாது­காப்புச் சபை மூலமே சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்க முடியும் என்றும், ஆனால், வீட்டோ அதி­காரம் கொண்ட ரஷ்­யாவும், சீனாவும் தமக்கு ஆத­ர­வாக இருப்­பதால், ஒரு­போதும் அத்­த­கைய விசா­ரணைக் குழு அமைக்க முடி­யாது என்­பதும் இலங்கை அர­சாங்­கத்தின் கருத்து.
இத்­த­கை­ய­தொரு துணிவும் கூட, இலங்கை அர­சாங்­கத்தின் அலட்­சியப் போக்­கிற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது என்­பதில் சந்­தே­க­மில்லை.
இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் குறித்து நம்­ப­க­மான, நடு­நி­லை­யா­ன­தொரு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­பதே, மேற்­கு­ல­கி­னது விருப்­ப­மாக உள்­ளது.
சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வதிலுள்ள சிக்­கல்கள் குறித்து, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் கவ­னத்தில் கொள்­ளாமல் செயற்­பட வாய்ப்­புகள் இல்லை.
பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் கூட, வரும் மார்ச் மாதத்­துக்குள் இலங்கை அர­சாங்கம் ஒரு நம்­ப­க­மான, நடு­நி­லை­யான விசா­ர­ணையை மேற்­கொள்ளத் தவ­றினால், சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­ மு­றையை வலி­யு­றுத்­துவோம் என்று தான் குறிப்­பிட்­டுள்ளார்.
எந்­த­வொரு கட்­டத்­திலும், சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்­குவோம் என்று பிரித்­தா­னி­யாவோ அல்­லது வேறு நாடு­களோ குறிப்­பி­ட­வில்லை.
ஒரு விட­யத்தை வலி­யு­றுத்­து­வ­தற்கு எந்த நாட்­டுக்கும் எந்தக் கட்­டுப்­பாடும் இருக்­காது.
ஆனால், அதை செயற்­ப­டுத்­து­வ­தற்கு சட்­ட­வ­ரம்­பு­க­ளுக்கு உட்­பட்­டாக வேண்டும்.
சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­ மு­றையை வலி­யு­றுத்தப் போவ­தாக, பிரித்­தா­னியா கூறி­யுள்­ளதை வைத்துக் கொண்டு, சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை அடுத்த ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் உரு­வாக்­கப்­பட்டு விடும் என்று மிகை­யாகக் கனவு காண முடி­யாது.
இது ஒரு­வ­கையில் இலங்­கைக்­கான அழுத்­தங்­களை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­கான உத்­தி­யா­கவும் கரு­தப்­ப­டலாம்.
அதற்­கான முயற்­சி­க­ளி­லேயே பிரித்­தா­னி­யாவும் ஏனைய நாடு­களும் ஈடு­பட்டு வரு­கின்­றன.
வெளி­நாட்டுத் தலை­யீ­டு­களின் மூலம், பொறுப்­புக்­கூ­றலை மேற்­கொள்­வதில் உள்ள தடங்­கல்­களால் தான், இலங்­கையே சுதந்­தி­ர­மான உள்­ளக விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்று மேற்­கு­லகம் வலி­யு­றுத்தி வரு­கி­றது.
சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வது, இலங்­கைக்கு எத்­த­கைய கடு­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­துமோ, அதே­போன்று சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் அது ஒரு பெரும் சிக்­க­லான முயற்­சி­யா­கவே இருக்கும்.
இந்­த ­நி­லையில் தான், இலங்­கையை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களில் சர்­வ­தேச சமூகம் குறிப்­பாக மேற்­கு­லகம் இனிமேல் அதிக கவனம் செலுத்தக் கூடும்.
பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் கொழும்­பிலும் லண்­ட­னிலும் விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து, இணைய ஊட­கங்கள் பல­வற்றில், இலங்­கைக்கு எதி­ராக பிரித்­தா­னியா பொரு­ளா­தாரத் தடையை விதிப்­பது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக செய்­திகள் வெளி­யா­கின.
ஆனால், பிரித்­தா­னிய அர­சாங்க மட்­டத்தில் இருந்து அதற்­கான வாய்ப்­புகள் தொடர்­பான எந்தக் கருத்தும் வெளி­யி­டப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.
பொரு­ளா­தாரத் தடை என்­பது, இன்­றைய உலகின் சக்­தி­வாய்ந்த ஓர் ஆயு­த­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.
முன்னர் ஒரு காலத்தில் மிகப் பெரிய படை­களை வைத்து நாடு­களை மிரட்டும் போக்கு காணப்­பட்­டது.
பின்னர், டாங்­கி­களும், பீரங்­கி­களும் அதைத் தீர்­மா­னிக்கும் கார­ணி­க­ளா­கின.
அதை­ய­டுத்து, வலி­மை­யான கடற்­படை, விமா­னப்­ப­டை­களை வைத்து மிரட்டும் போக்கு இருந்­தது.
பின்னர், அணு­வா­யு­தங்­களை வைத்து மிரட்டும் காலம் இருந்து வந்­தது.
இப்­போ­தெல்லாம், வல்­ல­ரசு நாடுகள், ஆயு­தங்­களைக் காண்­பித்து மிரட்­டு­வ­தில்லை.
பொரு­ளா­தாரத் தடையை காட்­டியே மிரட்­டு­கின்­றன.
ஏனென்றால், சர்­வ­தேச பொரு­ளா­தாரத் தடை என்­பது ஒரு நாட்டை சீர­ழித்து விடும் என்­ப­துடன், அதன் ஒட்­டு­மொத்த வளர்ச்­சி­யையும் அடி­யோடு பெயர்த்துப் போட்டு விடும்.
அதன் விளைவு, உள்­நாட்டில் ஆட்சி மாற்­றத்­துக்கும் வழி­வ­குக்கும்.
அண்­மைக்­கா­லத்தில் அமெ­ரிக்­காவின் தடை­களை அடுத்து, மியான்­மரும், ஈரானும் தமது பிடி­வாதப் போக்கை தளர்த்திக் கொள்ள முன் வந்­தன.
இவை இரண்டும் அமெ­ரிக்­காவைக் கடு­மை­யாக எதிர்த்து வந்த நாடுகள்.
ஆனால், பொரு­ளா­தாரத் தடை இந்த நாடு­க­ளையும் வளைந்து கொடுக்க வேண்­டிய நிலையை ஏற்­ப­டுத்தி விட்­டது.
மிகப் பெரிய எண்ணெய்ப் பொரு­ளா­தா­ரத்தைக் கொண்­டி­ருந்த போதிலும், அமெ­ரிக்­காவின் தடை­களை எதிர்த்து ஈரானால் எதை­யுமே செய்ய முடி­ய­வில்லை.
இந்­த­ள­வுக்குப் பொரு­ளா­தாரத் தடை என்­பது இன்று வலிமை மிக்க ஆயு­த­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.
இத்­த­கைய கட்­டத்தில் தான், இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடை கூட விதிக்­கப்­ப­டலாம் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார் சஜித் பிரே­ம­தாஸ.
அதே­வேளை, இணைய ஊட­கங்­களில் உலா வந்­தது போன்று பிரித்­தா­னியா தனித்து, இலங்­கைக்குப் எதி­ராகப் பொரு­ளா­தாரத் தடையை விதிக்க வாய்ப்­புகள் குறைவே.
ஆனால், அத்­த­கை­ய­தொரு பிரே­ர­ணையை சர்­வ­தேச அரங்கில் பிரித்­தா­னியா முன்­வைக்கக் கூடும்.
இலங்­கையின் ஏற்­று­மதிப் பங்­கா­ளர்­களில் பிரித்­தா­னியா கிட்­டத்­தட்ட 12 சத­வீ­தத்தைக் கொண்­டுள்ள ஒரு நாடு.
என்­றாலும், பிரித்­தா­னியா மட்டும், பொரு­ளா­தாரத் தடையை கொண்டு வரு­வதன் மூலம் மட்­டுமே இலங்­கையை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று எதிர்­பார்க்க முடி­யாது.
ஏனென்றால், ஒரு­வேளை அதற்குப் பின்­னரும் இலங்கை பணிந்து போக மறுத்தால், பிரித்­தா­னி­யாவின் பெயர் கெட்டுப் போகும்.
எனவே, இத்­த­கை­ய­தொரு பொரு­ளா­தாரத் தடைக்­கான முயற்­சியை, ஏனைய நட்பு நாடு­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தே பிரித்­தா­னியா முடி­வெ­டுக்கும்.
கடந்­த­வாரம் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தில், பேசிய வெளி­வி­வ­கார மற்றும் கொமன்வெல்த் பணி­யக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஏனைய நாடு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­படும் என்று கூறி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
பொரு­ளா­தாரத் தடை என்­பது
இன்­றைய நிலையில், சர்­வ­தேச சமூ­கத்­தினால் பயன்­ப­டுத்­தப்­படும் இறுதி ஆயு­த­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.
ஏனென்றால், அதன் பாதிப்­பு­களை எந்த நாட்­டி­னதும் ஆட்­சி­யா­ளர்கள் அனு­ப­விப்­ப­தில்லை.
அந்த நாட்டு மக்­களே அதனை அனு­ப­விக்­கின்­றனர்.
இதனால், அந்த ஆயு­தத்தை கையில் எடுப்­ப­தற்கு முன்னர் ஒன்­றுக்குப் பல­முறை ஆலோ­ச­னைகள் நடத்­தப்­படும்.
இலங்கை விவ­கா­ரத்தில் கூட, பொரு­ளா­தாரத் தடை என்ற ஆயுதம் பிர­யோ­கிக்­கப்­ப­டுமா என்­பது கூட உறு­தி­யில்லை.
ஆனால், அது­பற்றிப் பேசப்­படும் நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ளது.
ஒன்­றுக்கு இரண்டு ஜெனீவா தீர்­மா­னங்கள் உதா­சீனம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், இலங்கை அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்கு மேற்கு நாடு­க­ளுக்கு வலு­வா­ன­தொரு ஆயுதம் தேவைப் ­ப­டு­கி­றது.
இதனால், அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து கொண்டு, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை இலங்­கைக்கு எதி­ராகப் பொரு­ளா­தாரத் தடையை விதிக்க பிரித்­தா­னியா வலி­யு­றுத்தக் கூடும்.
அமெ­ரிக்க –- ஐரோப்­பிய ஒன்­றிய கூட்டுப் பொரு­ளா­தாரத் தடை ஒன்று விதிக்­கப்­ப­டு­மானால் அது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை நிச்­சயம் ஆட்டம் காணச் செய்யும்.
ஏனென்றால், அமெ­ரிக்­காவும், ஐரோப்­பிய ஒன்­றி­யமும், இலங்­கையின் முக்­கி­ய­மான ஏற்­று­மதிப் பங்­கா­ளர்கள்.
இலங்­கையின் முதன்மைப் பத்து இடங்­க­ளி­லுள்ள ஏற்­று­மதிப் பங்­காளி நாடு­களில், அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, ஜேர்­மனி, இத்­தாலி, பெல்­ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்­கி­யுள்­ளன.
2012ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, இலங்கையின் ஏற்றுமதியில், அமெரிக்கா 22.6 வீதம், பிரித்தானியா 9.8 வீதம், பெல்ஜியம் 5.2 வீதம், ஜேர்மனி 4.8 வீதம், இத்தாலி 4.3 வீதம், பிரான்ஸ் 2.62 வீதம் பங்களிப்புச் செய்கின்றன.
அமெரிக்க –- ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடை ஒன்று ஏற்படுமானால், இலங்கை இந்த ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
இதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் அரைப் பங்கு அடியோடு பெயர்ந்து போகும்.
அத்தகையதொரு நிலை ஏற்படுமானால், இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும்.
அது அடிபணிவுக்கோ, ஆட்சி மாற்றத்துக்கோ காரணமாக அமையலாம்.
ஏனென்றால், இத்தகைய பொருளாதாரத் தடை பொதுமக்களை பெரிதும் பாதிக்கும்.
எனவே, இந்தப் பொருளாதாரத் தடையை விதிக்க முன்னர், மேற்குலகம் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கும்.
இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு – அதனை வழிக்குக் கொண்டு வருவதற்கு வேறு சாதகமான வழிமுறைகள் இல்லாத சூழலில் இதுபற்றி யோசிப்பதை தவிர, மேற்குலகிற்கு வேறு கதியும் இல்லை.
« PREV
NEXT »

No comments