Latest News

December 30, 2013

அமரர் சந்திரசேகரனின் 4ஆவது சிரார்த்த தினம் அட்டனில்
by admin - 0

மலை­யக மக்கள் முன்­ன­ணியின் ஸ்தாபகத் தலை­வரும், அமைச்­ச­ரு­மான அமரர் பெ. சந்­தி­ர­சே­க­ரனின் நான்­கா­வது சிரார்த்த தினம் புத்­தாண்டு தின­மான முதலாந் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் பிரதி பொதுச் செய­லாளர் எஸ். முரு­கையா தெரி­வித்­துள்ளார்.

அன்­றைய தினம் காலை 9 மணிக்கு அட்டன் ஸ்ரீ மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்தில் விஷேட பூஜையும், முற்­பகல் 10 மணிக்கு மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அட்டன் அலு­வ­ல­கத்தில் ஞாப­கார்த்த கூட்­டமும் நடை­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.. மலை­யக மக்கள் முன்­னணி தலைவர் சாந்­தி­னி­தேவி சந்­தி­ர­சே­கரன் தலை­மையில் நடை­பெறும் மேற்­படி நிகழ்­வு­களில் முன்­ன­ணியின் அர­சி­யல்­துறை தலை­வரும், பாரா­ளு­மான்ற உறுப்­பி­ன­ரு­மான வீ. இரா­தா­கி­ருஸ்ணன், செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ், நிதிச் செய­லா­ளரும், ஊவா மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான ஏ. அர­விந்குமார், மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஆர். இரா­ஜாராம், அம்­ப­க­முவ பிர­தேச சபை உறுப்­பினர் டி. பிரசாத், மலை­யக தொழி­லாளர் முன்­னணி பொதுச் செய­லாளர் கே. சுப்­பி­ர­ம­ணியம், நிதிச் செய­லாளர் எஸ். ஜெய­பா­ரதி, உப தலைவர் எஸ். கிருஷ்ணன் உட்­பட பலர் கலந்து கொள்­வார்கள்.

மேலும், அமரர் பெ. சந்திரசேகரனின் சிரார்த்த தின நிகழ்வுகள் தோட்ட வாரியாகவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
« PREV
NEXT »

No comments