நித்திரையில் இருந்த மகனை தந்தையும் மாமனாரும் இணைந்து கல்லால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று தெல்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மேற்படி இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
தெல்தோட்டை முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசத்தில் வதியும் பாரூக் மொஹமட் பாஹிம் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு தந்தை மற்றும் மாமனாரால் படுகொலை செய்யப்பட்டவராவார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநரான இவ்விளைஞருக்கும் அவரது மாமனாருக்குமிடையில் இருந்து வந்த தனிப்பட்ட முறுகல் நிலையினையடுத்து இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் காயமடைந்த மாமனார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய மாமனார் மறுநாள் இளைஞனின் தந்தையுடன் இணைந்து நித்திரையிலிருந்த போதே கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கொல்லப்பட்ட இளைஞனின் தந்தையும் மாமனாரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின் றன.
No comments
Post a Comment