பாதினீயம் களைகளை கட்டுப்படுத்த அப் பகுதி பிரதேச செயலர்களூடாக தொடர்ச்சியான செயற்பாட்டினை முன்னெடுத்து தங்கள் மாவட்டத்தில் பாதினீயங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொ ள்ளுமாறு வடக்கு மாகாண விவசாயம் கம நல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன் வடமாகா ணத்தின் மாவட்ட செயலாளர்களுக்கு அனு ப்பியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவல ர்கள் மற்றும் அப் பிரதேசங்களில் இய ங்கும் கிராம மட்ட அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு பாதினீயம் களைகளை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி பாதினீ யம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்ப ட்டுள்ள டிசம்பர் மாதத்தில் களைகளை அழிப்பதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பி ப்பதுடன் இது தொடர்பான முன்னேற்ற அறிக்கைகளையும் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதிக்குமுன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறும் பணித்துள்ளார்.
No comments
Post a Comment