Latest News

December 09, 2013

ஈழத்தமிழ் இளைஞனின் உயிரைக்காப்பாற்ற உதவும் கரங்களுக்கு
by admin - 0



ஈழத்தமிழ் இளைஞனின் உயிரைக்காப்பாற்ற உதவும் கரங்களுக்கு உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளியான நிரூபன் த/பெ சாந்தகுமார் , வயது 30, என்பவர் தற்போது வவுனியா செட்டிக்குளம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவர் 2009.03.18 ஆம் திகதியன்று ஈழத்தில் நடந்த யுத்தத்தில் விழுப்புண் அடைந்தார். அதன் காரணமாக இடுப்புக்கு கீழ் முற்றாக செயலிழந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை படுத்தபடுக்கையிலே உள்ளார். இவருக்கு படுக்கை புண் மிக மோசமான நிலையில் இருந்த போது, ஒரு மாதத்திற்கு முன்னர் இணையதளம் வாயிலாக (பேஸ்புக்) இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டும் , யாரும் உதவ முன்வரவில்லை. தற்போது காச நோயாலும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் உள்ளார். எமது சகோதரன் நிருபனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து செல்கிறது. எனவே இவரது மருத்துவ சிகிச்சைக்காக மனிதநேயமுள்ள உறவுகளே கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் முகவரியில் தொடர்புகொண்டு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தொலைபேசி இல. 0094 776092770

முகவரி -

நிரூபன்

த/பெ. சாந்தகுமார்

இல. 27, விநாயகர் புரம் வவுனியா,

இலங்கை.
« PREV
NEXT »

No comments