நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் பிரதமராக வி. உருத்திரகுமாரன் அவர்கள், ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசெ 6-7-8 ஆகிய நாட்களில் அமெரிக்காவின்
நியூ ஜேர்சியிலும், துணையாக சூரிச்சிலும்
இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்
காலத்துக்கான முதலாவது அரசவை அமர்விலேயே ஏகமனதாக வி.உருத்திரகுமாரன், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரங்கு நிறைந்த கரவொலியோடும், உலகத் தமிழர்களது வாழ்த்துக்களோடும் பிரதமர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஏற்புரையின வி.உருத்திரகுமாரன் அவர்கள், 2002ம் ஆண்டு தமிழ் தேசிய இனத்தின்
உணர்ச்சியின் பிரதிபலிப்பான, எழுச்சியின்
வடிவமான தமிழீழ விடுதலைப் புலிகள்
தங்களின் போராடும் ஆற்றலினைவும்,
பேரம்பேசும் திறத்தினையும், மக்களையும்
தேசத்தினையும் நிர்வகிக்கும் தகைமை எனும் தலையினையும், அனைத்துலகிற்கு எடுத்தியம்பி, அதனடிப்படையில் அனைத்துலகத்தின்
அனுசரணையுடன் சமாதான
பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. அந்தவேளையிலே தேசியத்
தலைவரது நம்பிக்கைக்கு ஒருவனாக அதில்
பணியாற்றும் பேறு எனக்கு கிடைத்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
செயற்பாடுகளை அந்த செயற்பாட்டின் ஒர்
தொடர்ச்சியாகவே நான் பார்க்கின்றேன். அந்தப் பணி முடியும் வரை அந்த இலட்சியம்
அடையும் ஓயப்போவதில்லை என
முரசறைந்தார். தற்போது அமெரிக்காவினை வாழ்விடமாக
கொண்டுள்ள திரு.விசுவநாதன்
உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராஜதந்திர அரசியற் செயற்பாட்டுக்களத்தில் பெரும்
பங்காற்றி வருகின்ற செயல்வீரர்களில் ஒருவர். அனைத்துலக சட்டவல்லுனராக விளங்கும் இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும், 2002ம் ஆண்டுக் காலப்பகுதியின் சமாதானப் பேச்சுவார்த்தையில் தமிழீழ தரப்பு பிரதிநிதிகளாக ஒருவராக
பங்கெடுத்தவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்து, அதன் முதற்தவணை அரசவையின் பிரதமராக திகழ்ந்திருந்தவர். தற்போது மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment