கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் இவ்வாண்டுக்கான கால போக நெற்செய்கைகளுக்குரிய மானிய உரம் உரிய முறையில் கிடைக்கவில்லையென விவசாயிகள் கவலை வெ ளியிட்டுள்ளனர்.
காலபோக நெற்செய்கைக்குரிய மானிய உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஏக்கருக்குரிய மானிய உரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல சேவை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இம் மாவட்டத்தில் முழங்காவில் பகுதியில் விநியோகிக்கப்படுகின்ற மானிய உரம் உரிய முறையில் தமக்குக் கிடைக்கவில்லையென அப்பகுதி விவசாயிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்..
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மானவாரி செய்கைகளுக்குரிய உரமானியம் கிடைக்கவில்லை எனவும் இதனை உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment