Latest News

December 10, 2013

எமது பிரதேச மண்வளத்தை சீரழிக்கும் பாதினீயத்தை முற்றாக அழிக்க வேண்டும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
by admin - 0

எமது மண்ணின் வளத்தை சீர­ழிக்கும் பாதி­னீயக் களையை எமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து முற்­றாக அழிக்க வேண்டும். ஒரு மாதத்தில் ஒரு தடவை அகற்றி விட்டு பாதி­னீ­யத்தை முற்­றாக அழித்து விட்­ட­தாக எண்­ணி­வி­டக்­கூ­டாது. தொடர்ச்­சி­யாகச் செய்­யப்­பட்­டாலே அதனை அழிக்க முடியும் என வடக்கு மாகாண விவ­சாய அமைச்சர் பொ. ஐங்­க­ர­நேசன் தெரி­வித்தார்.
நல்லூர் பிர­தேச சபை கோண்­டாவில் இரா­ம­கி­ருஷ்ணன் வித்­தி­யா­லயத்தில் பாதி­னீ­யத்தை அழிக்கும் செயற்­றிட்டம் பிர­தேச சபைத் தலைவர் ப.வசந்­த­குமார் தலை­மை யில் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­ கொண்ட அமைச்சர் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
விவ­சா­யத்­திற்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வாறு அதன் அபி­வி­ருத்­திக்­காக பொது நோக்­காகக் கொண்ட திட்­ட­மாக இது அமைய வேண் டும். மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் பாதி­னீ­யத்தை அழிக்கும் நட­வ­டி க்கை துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ றது. ஏற்­க­னவே இந்த களைகள் இருந்­த­போதும் அது குறித்து பெரிய அளவில் கவ­னிக்­கப்­ப­டா­மலே இருந்­தது. இன்று மாண­வ ர்­களும் பொது­மக்­களும் இது தொடர்பில் கவனம் செலுத்தக் கூடி­ய­தாக இந்த நிகழ்வு பர­வ­லாக இடம்­பெ­று­கின்­றது.
சிறந்த பல மூலி­கைகள் எமது பகு­தியில் இருக்­கின்­றன. அவைகள் இந்­தக்­களை கார­ண­மாக அழிந்து கொண்டு வரு­கின்­றன. எமது மண்­வ­ளங்­களைப் பேணக்­கூ­டி­ய­தாக இதனைக் கருத்தில் கொள்­ள­வேண்டும். பச்சை இரா­ணுவம் அல்­லது பச்சைப் புற்­று நோய் எனக்­க­ருதும் இதன் கெடுதி மிக வும் மோச­மா­னது. எமது மர­ப­ணுவைக் கூட மாற்றும் தன்மை கொண்­டது. அந்த அளவு பார­தூ­ர­மான பாதி­னீயக் களையை அழிப்­பதில் நாம் அனை­வரும் ஒன்­று­பட்டுச் செயற்­ப­ட­வேண்டும். இதை எங்­க­ளது தேசிய கட­மை­யாகக் கொள்­ள­வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் நல்லூர் பிர­தேச செயலர் பா.செந்­தில்­நந்­தனன், மாகாண விவ­சாய பணிப்­பாளர் இ.ஸ்ரீபா­ல­சுந்­தரம் மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னல்ட், இராமகி ருஷ்ண வித்தியாலய அதிபர் நல்லூர்பிர தேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர் கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments