Latest News

December 08, 2013

இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவனம்!
by admin - 0


இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திர நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடக மற்றும் கருத்துச் சுதந்திர கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பிரதி ஊடகப் பேச்சாளர் மாரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் சமய வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் தொடர்பில் நம்பகமானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments