இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதான எதிர்க் கட்சியான தொழிற் கட்சியும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து பேசும் போது பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை உலக நாடுகள் பொறுமை காக்ககூடாது என தமிழர் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பம் ஏற்படும் வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும் கூறினார்.
No comments
Post a Comment