அதிகளாவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
சுற்றுலா அல்லது மாணவர் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புகலிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.
No comments
Post a Comment