வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.
2003 யு.என்.பி ஆட்சிக் காலத்தில் 1.86 ட்ரில்லியன் ரூபாயாகவிருந்த அரச கடன் (Outstanding govt .Debt ), 2013 இல் 6.63 ட்ரில்லியன் ஆக உயர்ந்தது ஏன் என்று விளக்குமாறு நிதியமைச்சர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருக்கலாம்.
அதேபோல் 2003இல் 843 பில்லியன் ரூபாவாக இருந்த வெளிநாட்டுக்கடன்( Foreign Debt ), கடந்த 10 வருடங்களில் 3 ட்ரில்லியன் ரூபாவாக ஊதிப் பெருத்ததின் தாற்பரியம் பற்றி வினவி இருக்கலாம்.
ஆனால் ஆளும்தரப்பினரை நோக்கி கேள்வி எழுப்புவதைத் தவிர்த்து, அவர்கள் வேண்டுமென்றே முன்வைக்கும் புலிக் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதில்தான் சம்பந்தன் அவர்கள் தனது நேரத்தைச் செலவிடுகின்றார்.
புலிகளுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை என்கிற சம்பந்தன் அவர்களின் கூற்று தவறானதென, 2004 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏக பிரதிநிதித்துவ சொல்லாடலைக் குறிப்பிடுகின்றேன்.
சம்பந்தன் என்ன சொன்னாலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே இருந்த அரசியல் செயற்பாட்டு உறவினை தமிழ் மக்கள் நன்கறிவார்கள். அதேபோல், சிங்கள தேசத்தின் பெரும்பான்மையான அரசியல் தலைமைகளும் அந்த உறவுநிலையைப் புரிந்து கொள்ளும்.
அதுமட்டுமல்ல, 'இரணிலை ஆட்சி பீடமேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்து விட்டார்கள்' என்கிற மேற்குலகின் ஆதங்கத்தை சம்பந்தனும் பிரதிபலிக்கின்றார்.
மேற்குலகோ,அல்லாத இந்தியாவோ, இலங்கை விவகாரம் குறித்து, தெளிவானதொரு தந்திரோபாய நிலைப்பாட்டினை வைத்திருக்கின்றன. இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில், மென்மையான அல்லது சற்று இறுக்கமான போக்கினை எவ்வாறு பிரயோகிப்பது என்பதில்தான் அவர்களிடையே வேறுபட்ட அணுகுமுறை காணப்படும்.
ஆனால் சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரை, சிங்களத்திற்கும் மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் ஏற்றவகையில், உறவுகளைத் திரிப்பதிலும், அவர்கள் சொல்லும் 'பயங்கரவாதிகள்' என்கிற கருத்தினை மீள உறுதிப்படுத்துவதிலுமே விடாப்பிடியாக நிற்கின்றார்.
வல்லரசுகளின் நலனிற்கு ஏற்ப, வரலாற்றினை திரித்துக் கூறினாலும், ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பதை வட மாகாணசபை படும்பாட்டிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதால், தான் கூறுவதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களென்று கற்பிதம் கொள்வது அபத்தமானது. இவர் பாடாவிட்டாலும், மாவீரர் புகழினை ஏனையோர் தேர்தல் மேடைகளில் பாடித்தான் பெருமளவு வாக்குகளை கூட்டமைப்பு பெற்றது.
நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி. அவர்கள், தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப்பற்றி குறிப்பிட்ட விவகாரத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லையென்ற சம்பந்தன், வட மாகாணசபைத் தேர்தல் மேடைகளில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உட்பட பல கூட்டமைப்பின் எம்பி களும் அதன் உறுப்பினர்களும் மாவீரர் புகழ் பாடும்போது, அது தவறென்று ஏன் கூறவில்லை?.
மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போதல் என்பது, பதவிகளையும் அதனூடாக அதிகாரங்களையும் பெற்றுத் தருமென்றால், அதனை இந்த அரசியல்வாதிகள் அனுமதிப்பார்கள். பதவி கிடைத்தபின், அந்த மக்களின் உணர்வுகள், அதிகாரங்களைப் பெறுவதற்கு இடையூறாக இருந்தால், அதனைத் தூக்கி எறிவதற்கும் இந்த அதிகார விரும்பிகள் பின்னிற்கமாட்டார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே, இரண்டு விதமான, ஆனால் முரண்படுவது போலான போக்குகள் காணப்படுகின்றன.
சிறிதரன், சிவாஜிலிங்கம் போன்றோர், பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளோடு ஒன்றிச் செல்லும் போக்கினை உடையவர்களாகவும், சம்பந்தன் சுமந்திரன் விக்கினேஸ்வரன் போன்ற உயர்மட்டத்தினர் இராஜதந்திர வட்டார உரையாடல்களில், மக்களின் உணர்வுகளை உள்வாங்காத விதத்தில் செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளோடு நிற்பவர்கள், வாக்குச் சேகரிப்பதற்குத் தேவையானவர்கள்

. இதனை கூட்டமைப்பின் உயர் குழாம் புரிந்து வைத்துள்ளது.
ஆனால், மக்கள் ஆணையைப் பெற்றபின்னர், ' இராஜதந்திரம்' என்கிற வெளியில் உலா வரும்போது, வல்லானின் நலனிற்கு ஏற்ப கோட்பாடுகளை புறம்தள்ளும் போக்கினை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்த இரண்டு தோற்றப்பாடுகளும் உண்மையிலேயே, முரண்நிலை சார்ந்ததா?.
அல்லது கூட்டமைப்பின் இருப்புநிலைக்கு, இவ்வாறான முரண்போக்கு அவசியமாகிறதா?.
வாக்கு வங்கி அரசியல் தளச்செயற்பாட்டோடு தம்மை முடக்கிக்கொண்டு, வெகுஜன மக்கள் அமைப்புகளில் இருந்து தம்மை அன்னியமாக்கிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பில் உள்ள இரண்டுவிதமான சக்திகளும், அடிப்படையில் ஒத்த பண்பினைக் கொண்டவர்கள் என்று கணிப்பிடுவது தவறில்லை போல் தெரிகிறது.
புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அந்தப் பேரியக்கம் முன்வைத்த ஒரு பூர்வீக தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோட்பாட்டின் நியாயப்பாட்டினை, கட்சியின் உயர் மட்டம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச சக்திகளோடு பேசும்போது, தமக்கும் அக்கோட்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் உயர் மட்டத்தினர் நடந்து கொள்கின்றார்கள். புலிகளுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்வது,அடிப்படைக்கோட்பாட்டினை நிராகரிப்பதற்கே என்கின்ற உண்மையை மறைக்க முடியாது.
இலங்கை அரசின் மீது மென் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வல்லான்களின் பெருவிருப்பானது, சுயநிர்ணய உரிமை இல்லாத, சிங்களத்தின் இறைமையை ஏற்றுக்கொள்ளும் தீர்வாக இருக்க வேண்டும் என்பதே.
அதேவேளை சர்வதேசத் தரமிக்க சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவர்கள், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசம் என்பதனடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்வதில்லை.
அது குறித்தான அக்கறை அவர்களுக்குக் கிடையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள், 13 வது திருத்தச் சட்டத்துள் வாழ, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் விரும்புவதால், நாம் அது குறித்துப் பேசுவதில்லை என்கிறது மேற்குலகம். ஆனாலும், அனைத்துலக நெருக்கடிக்குழுவின் அறிக்கைகள் ஊடாக, மேற்குலகம் வெளிப்படுத்தும் கருத்தினையே கூட்டமைப்புச் சொல்கிறது என்பதனை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில், இலங்கை அரசோடு இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்து, மாகாணசபைதனை இயங்கவைக்கலாம், வலிவடக்கில் வீடழிப்பினை நிறுத்தலாம், ஆளுநரின் அதிகார எல்லையின் சுற்றளவினைக் குறைக்கலாம், 17 பில்லியனுக்கு மேற்பட்ட நிதியைப் பெறலாம் என்கிற கணிப்பீடுகள் யாவும் கானல்நீர் போல் ஆகும் சோக நிகழ்வினை இப்போது காண்கிறோம்.
அரசின் மீது மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் கொடுக்கப்படவுள்ள அழுத்தம், இந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வினைத் தருமா?..அல்லது கோத்தபாயாவின் இந்திய விஜயமும், கடற்படை ஒப்பந்தங்களும், பேரவை அழுத்தங்களை நீர்த்துப்போக வைத்து விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வெறுமனே, சம்பந்தனின் புலிகள் மீதான அடிப்படையற்ற விமர்சனங்கள் எதுவும், வல்லரசுகளின் நிலைப்பாட்டினை மாற்றப்போவதில்லை. ஆனால் எம்மக்களின் அரசியல் பிறப்புரிமையை அவை பலவீனமாக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டு.
- இதயச்சந்திரன் -

No comments
Post a Comment