பொது நிர்வாக உள்நாட்டு விவகார அமைச்சு மேற்கொண்டு வரும் காணாமற் போனோர் மற்றும் யுத்த காலத்தில் மரணமானோர் தொடர்பான கணக்கெடுப்பில் மலையத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரும் தாம் இழந்தவற்றையும் யுத்த காலத்தில் மரணமான அல்லது ஊனமுற்ற அல்லது காணாமற் போனோர் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என மலையக மறுமலர்ச்சி அமைப்பின் செயலாளர் தேசமான்ய ஹஸன் ஹஸனார் தெரிவித்தார்.
அமைப்பின் தலைவர் நடராஜா ரகுபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இன்று அரசாங்கம் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின்போது காணாமற் போனோர், ஊனமுற்றோர், மரணித்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றினை நடத்திவருகின்றது.
இதில் மலையகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே, பயமின்றி தம் குடும்பத்தில் யாராவது இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பின் உடனடியாக கணக்கெடுப்பினை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுக்கோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கோ தகவல்களை வழங்க முடியும்.
மேலதிக விபரங்களை குறித்த கணக்கெடுப்பில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளிடமே அல்லது குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகளிடமோ பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
No comments
Post a Comment