வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் கமல் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் படுகொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கொழும்பில் வைத்து இரகசிய குற்ற புலனாய்வு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலனையை சேர்ந்த இளைஞ்ஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தானியல் றெக்சியன் கடந்த 26ஆம் திகதி புங்குடுதீவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளதாக முதலில் செய்தி பரவிய போதும் யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் தலையின் பின் பகுதியில் 9மி.மீ ரக மைக்கிறோ பிஸ்ரலால் சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்தில் ஓர் அச்ச நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஊர்காவற்துறை பொலிசாரும் இரகசிய குற்ற புலனாய்வு பொலிசாரும் இரவு பகலாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment