இந்தியாவை பல கூறுகளாகப் பிரிப்பதற்கு பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. உலகில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவை பல கூறுகளாகப் பிரிப்பதில் மேற்கு நாடுகளுக்கு பாரிய விருப்பம் உள்ளது. இந்த நிலைமையை புரிந்துகொண்டு இந்தியா செயற்படவேண்டியது அவசியமாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
ரஷ்யா பல கூறுகளாக பிரி்க்கப்பட்டதைப்போன்று இந்தியாவிலும் பிரிவை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இன ரீதியிலும் கலாசார ரீதியிலும் இந்தியாவில் பாரிய பிரிவுகள் இருப்பதால் இவ்வாறு பல கூறுகளாக இந்தியா பிரிந்து விடுவதற்கான அபாயம் காணப்படுகின்றது. எனவே இது குறித்து இந்தியா அவதானத்துடன செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்குக்கு செல்வது வரவேற்கத்தக்க விடயமாகும். வடக்கில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை இந்திய பிரதமர் நேரில் பார்ப்பது சிறந்ததாக அமையும். ஆனால் அவர் ஒரு தரப்பை மட்டும் சந்திக்காமல் அனைத்து தரப்பினரையும் சந்திக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் அங்கு மேலும் கூறியதாவது
தமிழகத்தின் அழுத்தம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்குக்கு செல்வது வரவேற்கத்தக்க விடயமாகும். பொதுநலவாய மாநாட்டுக்கு அவர் வருகை தரவில்லை. தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணதாகவே அவர் அந்த முடிவை எடுத்தார். காரணம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடனேயே இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. எனவே தமிழக கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாகும்.
தற்போது பிரதமர் வரலாம்
அந்தவகையில் இலங்கைக்கு வேறு காரணங்களுக்காக இந்திய பிரதமர் வருகை தரலாம். அந்தவகையில் தற்போது வட மாகாண முதல்வரின் அழைப்பில் இந்திய பிரதமர் வருவார் என கூறப்படுகின்றது. ஆனால் அது குறித்து அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது. எந்த விடயமும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த விடயம் தொடர்பில் எனது தனிப்பிட்ட கருத்தை இங்கு கூறுகின்றேன்.
இருண்டு தரப்பையும் பார்க்கவேண்டும்
தற்போதைய நிலைமையில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து வடக்குக்கும் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை நேரில் பார்ப்பது சிறந்ததாக அமையும். கடந்த நான்கு வருடங்களில் எவ்வாறான அபிவருத்திகளை இலங்கை அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துள்ளது என்பதனை இந்திய பிரதமர் நேரில் பார்ப்பது மகவும் சிறந்ததாக அமை யும்.
ஆனால் இந்திய பிரதமர் இலங்கை வந்தால் ஒரு தரப்பை மட்டும் சந்திக்காமல் அனைத்து தரப்பினரையும் சந்திக்கவேண்டும். அனைத்து தரப்பினரையும் சந்தித்து உண்மை நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும். பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனைப் போன்று ஒரு தரப்பை மட்டும் அதாவது தமிழ்க் கூட்டமைப்பை மட்டும் சந்தித்து விட்டு சென்றுவிடக்கூடாது.
தமிழ் மக்களுக்கு அநீதி இல்லை
யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் வடக்கு கிழக்கில் 15 இலட்சம் தமிழ் மக்களே வாழ்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே 16 இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவ்வாறு பார்க்கும்போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேதான் அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்துவருகின்றனர். எனது தொகுதியில் 23 வீதமானோர் தமிழ் மக்களாவர்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் உள்ளனர். பொலிஸ் சேவையில் உள்ளனர். சிங்கள பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
திருகோணமலை துறைமுகம்
இதேவேளை பிரித்தானியாவில் 1959 ஆம் ஆண்டு இந்திய தலைவர் ஒருவர் நிகழ்த்திய உரையில் இந்தியாவின் பாதுகாப்பானது இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலேயே தங்கியுள்ளது என்று கூறியிருந்தார். அந்தளவுக்கு இந்தியாவின் கவனம் திருகோணமலை துறைமுகத்தில் காணப்பட்டது. ஒருமுறை திருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் சிலவற்றை அமெரிக்காவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன வழங்க முற்பட்டபோது அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி பலவந்தமாக இலங்கை வந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். அந்த நிகழ்வுக்கு அப்போதைய பிரதமர் பிரேமதாச செல்லவில்லை. அக்காலத்தில் இந்தியா வடக்கில் பாண்களையும் போட்டது.
இந்தியாவை பிரிக்க சதி
அந்தவகையில் தற்போது இந்தியாவை பல கூறுகளாக பிரித்துவிடும் சதி அபாயம் உள்ளது. மேற்கு நாடுகள் இதில் விருப்பமாக உள்ளன. இந்தியாவில் இன மற்றும் கலாசார ரீதயில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி இந்தியாவை பிரிக்க முற்படலாம். மாபெரும் நாடாக இருந்த ரஷ்யாவை 14 கூறுகளாக பிரித்தனர்.
அதேபோன்று உலகின் இரண்டாவது சனத்தொகையை கொண்ட நாடான இந்தியாவை பிரிக்க முயற்சிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் இதனை விரும்புகின்றன. எனவே இந்த விடயத்தை இந்தியா நன்றாக புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். தமிழ் நாட்டில் கோடிக் கணக்கில் மக்கள் உள்ளனர். எனவே அங்கு பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான அபாயகரமான சாத்தியங்கள் உள்ளன.
பின் ஜன்னல் ஊடாக திருடன்
திருடன் பிரதான கதவுகளை திறந்துகொண்டு உள்ளே வரமாட்டான். சமையலறையின் ஜன்னல் ஒன்றின் ஊடாக உள்ளே வந்து காரியத்தை சாதித்துவிட்டு பிரதான கதவின் ஊடாக வெளியே செல்வான். இந்த நிலைமையை இந்தியா புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமாகும். இந்தியாவுக்கு இந்த விடயம் நன்றாக தெரியும். இந்தியாவை பொறுத்தவரை இலங்கை சர்வதேசம் மற்றும் தமிழகம் என அனைத்து தரப்பினரும் தேவையாகும். அதனை நோக்காகக்கொண்டே இந்தியா செயற்பட்டுவருகின்றது.
பிரிட்டன் பிரதமரின் வடக்கு விஜயம்
பிரிட்டன் பிரதமர் கமரூன் ஏன் வடக்குக்கு சென்றார். பிரிட்டனில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பெறவே அவர் சென்றார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எம்மைப் போன்றுதான் அவரும் செயற்பட்டுள்ளார். கனடா ஏன் பொதுநலவாய மாநாட்டுக்கு வரவில்லை. ககனடாவில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதியே இருக்கின்றது. நான் அங்கு சென்று இதனை நேரில் பார்த்துள்ளேன்.
எனவே அங்குள்ள வாக்குகளை பெறும் நோக்கிலேயே கனடா பிரதமர் வரவில்லை. இதுதான் உண்மை. இவ்வாறு வடக்கு மக்களின் வாக்குகளை பெற நாம் ஏதாவது செய்யலாம். ஆனால் இனவாதத்தை வெளிப்படுத்திக்கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு மக்களின் வாக்குகளை பிடித்துக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு விவகாரம்
உலகில் இவ்வாறு பலமானவர்கள் சிறுபான்மை மற்றும் நடுத்தர மக்களை தமது தேவைகளுக்காக பயன்ப டுத்தி வருகின்றனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கின்றது. முன்னாள் அமெரிக்க ஜனா திபதி அமெரிக்க உளவு அமைப்பின் தவறான தகவலினால் ஈராக்கில் தாக் குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளார். அப்படியாயின் அங்கு அழிக்கப்பட்ட உயிர்களுக்கு யார் பொறுப்புக்கூறுவது? அவை குறித்து எங்கே விசாரணை? இலங் கையில் ஐந்து கொலைகள் நடந்ததாக விசாரணை கோரப்படுகின்றது. ஆனால் நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் கொலை செய்யப்பட்டமைக்கு விசாரணை இல்லையா?
No comments
Post a Comment