தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை அரசாங்க
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக
அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தோல்விகளின் தொடர்ச்சியாக
மதவாச்சி பிரதேச சபையின் அடுத்த
வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம்
நேற்று தோல்வியடைந்தது. ஆளும் கட்சிக்கு இந்த சபையில் 7
உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில்
ஆறு பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன்
இணைந்து வரவு செலவுத்
திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். மதவாச்சி பிரதேச சபையுடன் ஆளும் கட்சியின்
ஆட்சியின் கீழ் இருக்கும் 9
உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத்
திட்டங்கள் இதுவரை தோல்வியடைந்துள்ளன. எம்பிலிப்பிட்டி, இம்புல்பே, வத்தளை, அலவ்வ,
ராஜாங்கனை, மீரிகம, கெஸ்பேவ, பேலியகொட
ஆகிய பிரதேச சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட
வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்தன
என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் மீது கீழ் மட்டத்தில் இருக்கும்
கடும்
அதிருப்தி நிலையே உள்ளூராட்சி சபைகளில்
பிரதிபலித்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அரசாங்கத்திற்குள் இருக்கும் ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட
உறுப்பினர்கள் ராஜபக்ஷ ஆட்சியாளர்கள்
தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றனர். இவர்கள் தமக்கு ஆதரவான
உள்ளூராட்சி சபைகளின்
பிரதிநிதிகளை கொண்டு இவ்வாறு வரவு செ
திட்டங்களை தோல்வியடைய
செய்து வருவதாக அரசியல் தரப்பில்
பேசப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment