Latest News

December 05, 2013

அவுஸ்ரேலியாவில் வைத்து அங்கஜன் கைது
by admin - 0

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமாக கடமையாற்றும்  அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர்  அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அங்கு குடியுரிமை விசா நிறைவு பெற்ற பின்னர் வசித்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாக் குடியுரிமை பெற்ற கடந்த 3 வருடகாலமாக இலங்கையில் வசித்து வந்தார் தற்போது இவருடைய அவுஸ்ரேலியா விசா நிறைவுபெற்ற நிலையில் அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் அவுஸ்ரேலியா சென்றார்.


கடந்த 3 மாதகாலமாக விசா இன்றி அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகின்றது
« PREV
NEXT »

No comments