Latest News

December 31, 2013

எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள சபர்ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்பு
by admin - 0

எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள சபர்ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்பு 


கிழக்கு எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள எரி­மலை ஞாயிற்­றுக்­கி­ழமை குமுற ஆரம்­பித்­த­தை­ய­டுத்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் அந்த எரி­ம­லையைச் சூழ­வுள்ள பிராந்­தி­யங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
மேற்­படி சபர்­ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்­ப­தற்கு முன் பாரிய வெடிப்பு சத்தம் கேட்­டுள்­ளது.

தொடர்ந்து எரி­ம­லை­யி­லி­ருந்து புகையும் சூடான சாம்­பலும் வெளிப்­பட்­டுள்­ளது.

இந்த எரி­மலைக் குமு­றலால் எவரும் காய­ம­டை­ய­வில்லை.
மேற்படி எரி­ம­லையைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­களின் சுமார் 300 சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் வாழ்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மத்­திய அமெ­ரிக்­கா­வி­லுள்ள சிறிய நாடான எல் சல்­வா­டோரில் 20க்கு மேற்­பட்ட எரி­ம­லைகள் உள்­ளன.

கடல் மட்டத்துக்கு மேலான 2129 மீற்றர் உயரமான சபர்ரஸ்ரிகியு எரிமலை அந்நாட்டின் மூன்றாவது உயரமான எரிமலையாகும்.
« PREV
NEXT »

No comments