Latest News

December 31, 2013

அக்­க­ரைப்­பற்று தபாற் கந்தோர் ஊழி­யர்­கள் மூன்­றா­வது நாளாக நேற்றும் பணிப்­பு­றக்­க­ணிப்­பு
by admin - 0

அக்­க­ரைப்­பற்று தபாற்­கந்தோர் தபால் அதிபர், உத்­தி­யோ­கத்­தர்கள் ஊழி­யர்­களை அச்­சு­றுத்தல் அடக்­கு­முறை மற்றும் தகா­த­வார்த்தை பிர­யோகம் செய்­து­வ­ரு­வதை கண்­டித்து இவரை இட­மாற்­று­மாறு கோரி தபால் ஊழி­யர்கள், உத்தியோ­கத்­தர்கள் கடந்த மூன்று தினங்­க­ளாக பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்
இவ் தபா­ல­கத்­திற்கு கடந்த 11 ம் திகதி புதிய தபால் அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தபால் அதிபர் தனது கட­மையை பொறுப்­பேற்­ற­பின்னர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தபால் அதிபர் தகாத வார்த்­தை­களால் பேசி­ய­தா­கவும் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை தாக்­கி­யுள்­ள­தா­கவும் அதனை கண்­டித்து வெள்­ளிக்­கி­ழமை பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­டனர்
இத­னை­ய­டுத்து, அக்­க­ரைப்­பற்று அஞ்சல் அத்­தி­யட்­சகர் மற்றும் மட்­டக்­க­ளப்பு பிரதி அஞ்சல் அதிபர் ஆகியோர் பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­ட­வர்­க­ளுடன் பேசி இணக்­கப்­பாட்­டிற்கு கொண்­டு­வந்­ததன் பிற்­பாடு ஊழி­யர்கள் வேலையில் ஈடு­பட்­டுள்­ளனர்
இந்த நிலையில், சனிக்­கி­ழமை காலையில் ஊழி­யர்கள் கட­மைக்கு சென்­ற­போது தபால் அதிபர் ஊழி­யர்­களை அச்­சு­றுத்தி தபால்­கந்­தோ­ருக்குள் மோட்­டார்­சைக்­கிளை செலுத்தி மோட்­டார்­சைக்­கிளின் வேகத்தை கூட்டி முறை­கே­டாக நடந்து கொண்­ட­தை­ய­டுத்து ஊழி­யர்கள் தபால் ­கந்­தோ­ரை­விட்டு வெளி­யேறி தபால் அதி­பரை இடம்­மாற்­று­மாறு கோரி தபா­ல­கத்­துக்கு முன்னால் வீதியில் நின்று பணிப்­பு­றக்­க­ணிப்பில் நேற்று திங்­கட்­கி­ழமை மூன்­றா­வது நாளாகவும் தொடர்ந்தும் பணிப்­புறக்­க­ணிப்பில் ஈடு­பட்­டனர்.­

அதே­வேளை தபால் அதிபர் தெரி­விக்­கையில் தான் இந்த மாதம் 11ம் திகதி தபா­லகத்தின் தபால் அதி­ப­ராக கட­மை­களை பொறுப்­பேற்­ற­துடன் தபால் உழி­யர்­சங்­கத்தின் செய­லா­ள­ரா­கவும் சிறந்த தபால் அதி­ப­ரா­கவும் அர­சாங்­கத்­தினால் விரு­துகள் பெற்­றுள்ள நான் இவ் தபா­ல­கத்­திற்கு வந்­ததும் இங்கு பார்த்­த­போது தபா­லகம் மாதிரி இல்­லாத நிலையில் இருந்­தது.

இத­னை­ய­டுத்து, ஊழி­யர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி சட்­ட­திட்­டங்­களை கடைப்­பி­டிக்கப் போவ­தாக தெரி­வித்து சட்­ட­திட்­டத்­திற்கு அமை­வாக செயற்­பட ஆரம்­பித்­த­தை­ய­டுத்து என் மீது பல்­வேறு கார­ணங்­களை தெரி­வித்து ஊழி­யர்கள் பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­டுள்­ளனர் இது தொடர்­பாக எனது மேல­தி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்­ள­தாக தபால் அதிபர் தெரிவித்தார்
இதேவேளை, இவ் பணிப்புறக்கணிப்பால் தபாலக த்தின் தபால்சேவைகள் முடங்கி யுள்ளதுடன் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தபால்விநியோகம்; கடந்த மூன்று தினங்கள் இடம்பெறவில்லை என்பதுடன் தபால்கந்தேரில் தபால்கள் குவிந்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
« PREV
NEXT »

No comments