கிளிநொச்சி நகரப் பகுதியில் கடந்த கால போரினால் அழிவடைந்த பாரிய தண்ணீர் தாங்கிக்குபதிலாக நகரத்தில் டிப்போ சந்திக்கு அண்மையாகவுள்ள இரத்தின புரத்தில் புதிய தண்ணீர் தாங்கி ஒன்றை அமைக்கும் பணியை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது. இத்தாங்கி ஆயிரம் கன மீற்றர் கொள்ளவைக் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில்.
இதே போல மேலும் இரு தண்ணீர் தாங்கிகள் பரந்தன், கிளிநொச்சிக் குளத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்தனர்.எனினும் இறுதியாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்படி தண்ணீர் தாங்கி உடைக்கப்பட்டதுடன், அந்த உடைந்த தண்ணீர்த் தாங்கி தற்போது கண்காட்சிப் பொருளாக இருப்பதுடன் அதனை சுற்றுலாப் பயணிகள் பலர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இத் தண்ணீர் தாங்கிக்கு பதிலாக புதிய தண்ணீர் தாங்கி அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment