Latest News

December 20, 2013

திருக்கேதிஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்பு
by admin - 0

மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் மண்டையோடுகள் மற்றும் மனித எலும்புகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார், திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவிலேயே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதலில் இரண்டு மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதனைதொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அத்துடன் வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிறிமூஸ் சிறாய்வா,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மனித எச்சங்களை பார்வையிட்டனர்.

தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தினுள் மேலதிகமான எழும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதனால் ஏனைய பகுதிகளை நாளை சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அவ்விடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டது
« PREV
NEXT »

No comments